For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

வெளியானது ’சூர்யா 45’ படத்தின் புதிய அப்டேட்!

'சூர்யா 45' படத்தின் புதிய அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது.
05:34 PM Jan 27, 2025 IST | Web Editor
வெளியானது ’சூர்யா 45’ படத்தின் புதிய அப்டேட்
Advertisement

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக இருப்பவர் சூர்யா. தற்போது ஆர்.ஜே. பாலாஜி இயக்கத்தில் 45- வது படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்திற்கு தற்காலிகமாக 'சூர்யா 45' என்று பெயரிடப்பட்டுள்ளது. இதில், த்ரிஷா, சுவாசிகா, இந்திரன்ஸ், காளி வெங்கட், நட்டி சுப்பிரமணியம், ஷிவதா உள்ளிட்ட நடிகர்கள் நடித்து வருகின்றனர்.இந்த படத்தினை டிரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

Advertisement

இப்படத்திற்கு சாய் அபயங்கர் இசையமைக்க உள்ளார். படத்தை இயக்குவதுடன் ஆர். ஜே. பாலாஜி வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து வருவதாக கூறப்படுகிறது. இப்படத்தின் படப்பிடிப்பு கோயம்புத்தூரில் நடைபெற்று வந்தது.

இந்நிலையில், இப்படத்தின் புதிய அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது. அதன்படி,  இப்படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு இன்னும் சில நாள்களில் சென்னையில் துவங்க உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. அதற்கான, செட் அமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது. இனிவரும் நாட்களில் படத்தின் அடுத்தடுத்த அப்டேட் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Tags :
Advertisement