For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

தெலுங்கில் ரீமேக்காகும் சூரியின் ‘#Garudan‘!

08:45 PM Oct 02, 2024 IST | Web Editor
தெலுங்கில் ரீமேக்காகும் சூரியின் ‘ garudan‘
Advertisement

சூரியின் ‘கருடன்’ திரைப்படம் தெலுங்கில் ரீமேக் செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Advertisement

நகைச்சுவை கதாபாத்திரங்களில் நடித்து தனக்கென தனி ரசிகர்களை கொண்ட நடிகர் சூரி வெற்றிமாறனின் விடுதலை படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். இந்த படத்தின் வெற்றியைத் தொடர்ந்து அடுத்தடுத்த வெற்றிப்படங்களைக் கொடுத்து வருகிறார். இவர் நடிப்பில் இந்தாண்டு வெளிவந்த கருடன் நல்ல வெற்றியைப் பெற்றது. இதனைத் தொடர்ந்து சமூகத்தில் ஆணுக்கும் பெண்ணுக்கும் கிடைக்கும் சுதந்திரம் குறித்து கேள்விகளை எழுப்பி சமூக கருத்துகளை உள்ளடக்கிய திரைப்படமாக கொட்டுக்காளி. இப்படமும் நல்ல வரவேற்பைப் பெற்றது.

தொடர்ந்து ‘விலங்கு’ இணைய தொடரை இயக்கிய பிரசாந்த் பாண்டியராஜ் கூட்டணியில் சூரி இணைந்துள்ளார். இப்படத்தின் நடிக்கும் ஏனைய நடிகர்கள், நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த விபரங்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் கருடன் திரைப்படம் தெலுங்கில் ரீமேக் செய்யப்பட்டு வருகிறது. இதில் பெல்லம்கொண்டா ஸ்ரீனிவாஸ், மஞ்சு மனோஜ், நரா ரோஹித் உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள். யார் எந்த கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள் என்ற தகவல் இன்னும் வெளியாகவில்லை. இதில் கதாநாயகிகளாக ஆனந்தி, அதிதி ஷங்கர் மற்றும் திவ்யா பிள்ளை ஆகியோர் நடித்து வருகிறார்கள்.

இதன் படப்பிடிப்பு பணிகளை வருகிற டிசம்பர் மாதத்திற்குள் முடிக்க படக்குழு திட்டமிட்டுள்ளது. 'கருடன்' படத்தின் தெலுங்கு ரீமேக்கினை 'நந்தி' படத்தினை இயக்கிய விஜய் கனகமெடலா இயக்கி வருகிறார். மேலும் இந்த படத்தை கே.கே.ராதா கிருஷ்ணன் தயாரித்து வருகிறார்.

Tags :
Advertisement