Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

பில்கீஸ் பானு வழக்கில் 11 குற்றவாளிகளை குஜராத் அரசு விடுவித்த விவகாரம் - உச்சநீதிமன்றம் நாளை தீர்ப்பு

08:35 AM Jan 07, 2024 IST | Web Editor
Advertisement

பில்கீஸ் பானு வழக்கில் 11 குற்றவாளிகளை குஜராத் அரசு விடுவித்த விவகாரத்தில்  உச்சநீதிமன்றம் நாளை தீர்ப்பு அளிக்க உள்ளது.

Advertisement

2002 குஜராத் கலவரத்தின்போது ஐந்து மாத கர்ப்பிணியாக இருந்த பில்கிஸ் பானு, கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார். மூன்று வயது குழந்தை உட்பட அவரது குடும்பத்தைச் சேர்ந்த 14 பேர் கொல்லப்பட்டனர். இந்த வழக்கின் குற்றவாளிகளான 11 பேருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட குற்றவாளிகளை ஆகஸ்ட் 15, 2022 அன்று குஜராத் பாஜக அரசு விடுவித்தது.

குற்றவாளிகள் முன்கூட்டியே விடுதலை செய்யப்பட்டதை எதிர்த்து பில்கிஸ் பானு உச்ச நீதிமன்றத்தை அணுகினார். அவர்களின் விடுதலையை ரத்து செய்யக்கோரி பலர் பொதுநல வழக்குகளும் தாக்கல் செய்தனர்.

இதுகுறித்து குஜராத் அரசு தாக்கல் செய்துள்ள பிரமாணப் பத்திரத்தில், “11 குற்றவாளிகளின் நடத்தை நன்றாக இருப்பதாகவும், நன்னடத்தை அடிப்படையில் அவர்களை விடுவித்ததாகவும்” தெரிவித்துள்ளது. குற்றவாளிகளின் விடுதலையை எதிர்த்து தொடரப்பட்டுள்ள பல்வேறு மனுக்களின் மீதான தீர்ப்பை  உச்சநீதிமன்றம் ஒத்தி வைத்தது.


இந்த நிலையில் பில்கிஸ் பானு மீதான கூட்டுப் பாலியல் வன்கொடுமை மற்றும் 2002 கலவரத்தின் போது நிகழ்த்தப்பட்ட  குற்றங்களுக்காக ஆயுள் தண்டனை அனுபவித்து வந்த 11 கைதிகளை முன்கூட்டியே விடுவித்த குஜராத் அரசின் முடிவை எதிர்த்து தொடரப்பட்ட மனுக்கள் மீது உச்ச நீதிமன்றம் திங்கள்கிழமை தீர்ப்பு வழங்க உள்ளது.

Tags :
Bilkis banocaseGujaratRape VictimSupreme court
Advertisement
Next Article