For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

அமைச்சர் செந்தில்பாலாஜியின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உச்சநீதிமன்றம் உத்தரவு!

11:40 AM Nov 28, 2023 IST | Web Editor
அமைச்சர் செந்தில்பாலாஜியின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உச்சநீதிமன்றம் உத்தரவு
Advertisement

அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு தொடர்பாக இன்று விசாரணைக்கு வந்த மனுவை, தள்ளுபடி செய்து உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. மேலும் மனுவை திரும்ப பெறவும் அனுமதி அளித்துள்ளது.

Advertisement

அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை அதிகாரிகள் ஜூன் 14ம் தேதி கைது செய்த போது திடீர் நெஞ்சு வலி ஏற்பட்டதால் ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு ஆஞ்சியோ சிகிச்சை அளிக்கப்பட்டது.  இதன்பிறகு அவரை  சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் சேர்த்தனர்.  அங்கு அவருக்கு இதய அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

இதன் பிறகு புழல் சிறையில் அடைக்கப்பட்ட  அமைச்சர் செந்தில் பாலாஜி சிறை மருத்துவர்களின் கண்காணிப்பிலிருந்து வந்தார்.  அவருக்கு அடிக்கடி உடல் சோர்வு, படபடப்பு ஏற்படுவதால் சிறையில் அவ்வப்போது அவரது உடல் நிலையை பரிசோதித்து சிகிச்சை மேற்கொண்டு வந்தனர்.  அவரது நீதிமன்ற காவலும் அவ்வப்போது நீட்டிக்கப்பட்டு வந்தது.

கடந்த நவ. 15-ம் தேதி அவருக்கு வாந்தி,  மயக்கம் ஏற்பட்டதையடுத்து அவரை பலத்த பாதுகாப்புடன் சென்னை ஸ்டான்லி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். காலில் உள்ள நரம்பை எடுத்து அறுவை சிகிச்சை செய்ததால் அடிக்கடி கால் மரத்து போவதாக செந்தில் பாலாஜி கூறியதையடுத்து, தேவைப்பட்டால் அவருக்கு மீண்டும் ஒரு முறை ஆஞ்சியோ சிகிச்சை அளிக்கப்படும் என கூறப்பட்டது.

இதனிடையே கடந்த 22-ம் தேதியுடன் அவரது நீதிமன்ற காவல் நிறைவடைந்த நிலையில், அவர் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் அன்று ஆஜர்படுத்தபட்டார். அப்போது 11வது முறையாக அவருடைய நீதிமன்றக் காவல் நீட்டிக்கப்பட்டு, வரும் டிச 4-ம் தேதி வரை சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார். அவர் தாக்கல் செய்த ஜாமீன் மனுவைச் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் இரு முறை தள்ளுபடி செய்த நிலையில், உயர் நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டது.

ஏற்கனவே இந்த வழக்கு கடந்த நவ. 20-ம் தேதி விசாரணைக்கு வந்த போது அமைச்சர் செந்தில் பாலாஜி தரப்பில் அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளதாகவும் இதனால் அவருக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என்றும் வாதிட்டார். இருப்பினும், அதற்கு அமலாக்கத்துறை தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்,செந்தில் பாலாஜியின் உடல் நிலை ஆரம்பத்திலிருந்தது போல் தான் உள்ளது என்றும் ஜாமீன் வழங்கினால் அவர் தனது அதிகாரங்களைப் பயன்படுத்தி சாட்சியங்களைக் கலைக்க வாய்ப்புள்ளது என்றும் தெரிவித்தார்.

இரு தரப்பு வாதங்களையும் பதிவு செய்த நீதிபதி, அமைச்சர் செந்தில் பாலாஜி உடல்நிலையை மருத்துவ பரிசோதனை செய்து அறிக்கையாகத் தாக்கல் செய்ய உத்தரவிட்டார். மேலும், வழக்கு விசாரணையை நவம்பர் 28க்கு ஒத்திவைத்தார். அதன்படி இன்று இந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் நீதிபதி பீலா.எம்.திரிவேதி முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. செந்தில் பாலாஜி தரப்பில் வழக்கறிஞர் முகுல் ரோத்தஹி ஆஜரானார். இவர் செந்தில் பாலாஜி மருத்துவ அறிக்கை தொடர்பாக விளக்கினார்.

விளக்கங்களை கேட்ட நீதிபதிகள், இதில் இருக்கும் பிரச்சனைகளை மருந்துகள் மூலம் குணப்படுத்தலாமே என கேள்வி எழுப்பினர். அதற்கு செந்தில் பாலாஜி தரப்பில், ”இதயம் மற்றும் மூளை நரம்பு சம்பந்தமான பிரச்சனைகளுக்கு மருத்துவமனையில் வைத்து உரிய மருத்துவ சிகிச்சை அளிக்க வேண்டும், ஏனெனில் அவருக்கு இதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. பாதிப்புகளால் அவருக்கு பக்கவாதம் வரும் வாய்ப்புகள் உள்ளதாக அறிக்கை அளிக்கப்பட்டுள்ளது” என கூறப்பட்டது.

அதற்கு நீதிபதிகள், தேவையான பரிசோதனைகள் செய்தாகிவிட்டது. நீங்கள் முன் வைப்பது போல எதுவும் அபாயகரமாக இல்லை. Chronic பிரச்சனைகள் மருந்துகளால் தீர்க்க முடியும் என இணையத்தில் படித்தேன் என கூறினர்.  பின்னர் செந்தில் பாலாஜி தரப்பில், ”இந்த மனுவை திரும்பப் பெற நாங்கள் தயாரகக் உள்ளோம்” என தெரிவித்தனர்.

அதற்கு நீதிபதிகள், மனுவை திரும்பப் பெற அனுமதி அளித்தனர். மேலும், கீழமை நீதிமன்றத்தில் வழக்கமான ஜாமீன் பெற மனு தாக்கல் செய்ய அனுமதி அளித்தும், மெரிட் அடிப்படையில் மட்டுமே செந்தில் பாலாஜியும் ஜாமீன் மனுவை பரிசீலனை செய்ய வேண்டும் எனவும் உத்தரவிட்டனர். இதனைத்தொடர்ந்து மனுவை திரும்ப பெற அனுமதித்து மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

Tags :
Advertisement