கன்னட நடிகர் தர்ஷனின் ஜாமினை ரத்து செய்தது உச்ச நீதிமன்றம்!
கன்னட திரை உலகில் மிக பிரபலமான நடிகர் தர்ஷன். இவர் தனது தோழியும் நடிகையுமான பவித்ரா கெளடாவை சமூக வலைதளத்தில் சீண்டியதாக, தனது ரசிகர் ரேணுகா சாமியைக் கடத்தி கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டார்.
சிறையில் இருக்கும்போது தர்ஷன் சிகரெட் மற்றும் தேநீர் கோப்பையுடன் அமர்ந்து இருக்கும் புகைப்படமும், நண்பருடன் தர்ஷன் விடியோ அழைப்பில் பேசும் விடியோவும் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த நிலையில், இந்த வழக்கில் நடிகை பவித்ரா கெளடா, தர்ஷனின் நண்பர்கள், ரசிகர் மன்றத் தலைவர் என 17 பேர் கைது செய்யப்பட்டனர். இதனை தொடர்ந்து இந்த வழக்கில், தர்ஷன் உட்பட 10 பேருக்கு ஜாமீன் வழங்கப்படிருந்தது. இதனை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்ட வழக்கு இன்று விசாரனைக்கு வந்தது. இவ்வழக்கை நீதிபதிகள் பர்திவாலா, மகாதேவன் அமர்வு விசாரித்தது.
வழக்கை விசாரித்த நீதிபதிகள் குற்றம் சாட்டப்பட்டவர் எவ்வளவு பெரியவர் என்றாலும் சட்டத்தை விட அவர் பெரியவர் இல்லை. கர்நாடக உயர் நீதிமன்றம் ஜாமீன் பிறப்பித்திருப்பது இயந்திரத்தனமானது என்று விமர்சித்தனர். மேலும் கர்நாடக உயர் நீதிமன்றம் தர்ஷனுக்கு அளித்திருந்த ஜாமீனை ரத்து செய்து உத்தரவிட்டனர்.