For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

சூப்பர் 8 சுற்று: வங்கதேசத்தை வீழ்த்தி இந்திய அணி அபார வெற்றி!

07:09 AM Jun 23, 2024 IST | Web Editor
சூப்பர் 8 சுற்று  வங்கதேசத்தை வீழ்த்தி இந்திய அணி அபார வெற்றி
Advertisement
டி20 உலகக்கோப்பை தொடரில் வங்கதேச அணிக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய அணி 50 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. 

Advertisement

ஜூன் 2ம் தேதி முதல் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் டி20 உலகக்கோப்பை போட்டியின் முதல் சுற்று முடிவடைந்தது. மொத்தமாக 20 அணிகள் பங்குபெற்ற இந்த உலகக்கோப்பை தொடரில் தற்போது 8 அணிகள் அடுத்த சுற்றுக்கு முன்னேறியுள்ளன. இந்நிலையில், டி20 உலகக் கோப்பைத் தொடரின் சூப்பர் 8 சுற்றில் நேற்று நடைபெற்ற போட்டியில் இந்தியா அணியும்,  வங்கதேசம் அணியும் மோதின. இரு அணிகளுக்கும் இடையிலான இந்தப் போட்டி ஆண்டிகுவாவில் உள்ள சர் விவியன் ரிச்சர்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்றது.

இந்தப் போட்டியில் டாஸ் வென்ற வங்கதேச அணியின் கேப்டன் நஜ்முல் ஹொசைன் ஷாண்டோ பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளார்.  இதனையடுத்து, இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது.  இந்திய அணியின் தொடக்க வீரர்களாக கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி களமிறங்கினர்.  ஒரு சிக்கர், 3 பவுண்டரி விளாசி கேப்டன் ரோஹித் சர்மா 11 பந்துகளில் 23 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

விராட் கோலி 3 சிக்கருடன் 28 பந்துகளில் 37 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இதையடுத்து, களமிறங்கிய விக்கெட் கீப்பர் ரிஷப் பந்த் 36 ரன்களும், சூர்யகுமார் யாதவ் 6 ரன்களும், ஷிவம் துபே 34 ரன்களும் சேர்த்தனர். இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 196 ரன்கள் எடுத்தது. அதன்படி, வங்கதேசம் அணிக்கு 197 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.

இதனையடுத்து 197 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய வங்கதேச அணியின் தொடக்க ஆட்டக்காரர் தன்சித் ஹசன் 29 ரன்களிலும், கேப்டன் நஜ்முல் ஹூசைன் ஷன்டோ 40 ரன்களிலும்,  ரிஷாத் ஹூசைன் 24 ரன்களிலும் வெளியேறினர். மற்றவர்கள் சொற்ப ரக்ளில் வெளியேறினர்.   20 ஓவர்கள் முடிவில் வங்களதேச அணி 8 விக்கெட் இழப்புக்கு 146 ரன்களே எடுத்தது.  இதன் மூலம் இந்திய அணி 50 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

இந்திய அணி தரப்பில் குல்தீப் யாதவ் 3 விக்கெட்டும்,  பும்ரா,  அர்ஷ்தீப் சிங் தலா 2 விக்கெட்டும்,  ஹர்திக் பாண்ட்யா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.  இந்திய அணியின் ஆல்-ரவுண்டர் ஹர்திக் பாண்ட்யா ஆட்டநாயகன் விருது பெற்றார்.  இந்திய அணி தனது கடைசி சூப்பர் 8 சுற்று ஆட்டத்தில் நாளை ஆஸ்திரேலியாவுடன் மோதுகிறது.

Tags :
Advertisement