காவலர் தேர்வு ஹால் டிக்கெட்டில் சன்னி லியோன் படம்! - உ.பி யில் சர்ச்சை
உத்தரபிரதேச மாநிலத்தின் காவலர் ஆட்சேர்ப்பு பணிக்கான எழுத்துத்தேர்வுக்கான ஹால் டிக்கெட்டில் பாலிவுட் நடிகை சன்னி லியோன் புகைபடம் இருந்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
உத்தரபிரதேச மாநில காவல் துறையில், போலீஸ் கான்ஸ்டபிள் பணிக்கான ஆட்சேர்ப்பு எழுத்துத்தேர்வு நேற்று(பிப்.17) நடைபெற்றது. இந்த ஆட்சேர்ப்பு பணிக்கான எழுத்துத்தேர்வு 75 மாவட்டங்களில் 2,385 மையங்களில் நடைபெற்றது.
இதையும் படியுங்கள் : “NDA 400 இடங்களை பெற வேண்டும் ; நான் 3வது முறை பிரதமராக வேண்டும் என்பதற்காக இதை கேட்கவில்லை” – பிரதமர் மோடி பேச்சு!
இந்த தேர்விற்கு அனுமதிச் சீட்டு இருந்தால் மட்டுமே தேர்வர்கள் தேர்வெழுத அனுமதிக்கப்படுவர். அவ்வாறு தேர்வெழுத வந்த நபர் ஒருவரின் அனுமதிச் சீட்டில் பாலிவுட் நடிகை சன்னிலியோன் பெயரும், புகைப்படமும் இடம் பெற்றிருந்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இதைக்கண்ட அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர். தற்போது இந்த அடையாள அட்டை சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. அந்த அடையாள அட்டையில், நடிகை சன்னி லியோனின் தேர்வு மையம் ஸ்ரீமதி சோனஸ்ரீ மெமோ ரியல் பெண்கள் கல்லூரி என்றும், அந்த கன்னோஜின் திருவா தாலுகாவில் உள்ளது என்றும் கூறப்பட்டுள்ளது. தேர்வருக்கு வழங்கப்பட்ட அடையாள அட்டையின் உண்மை தன்மை குறித்து இந்த சம்பவம் குறித்து சைபர் கிரைம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.