For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

பிரபுதேவா நடிக்கும் `பேட்ட ராப்' திரைப்படத்தில் சன்னி லியோன் - வெளியானது புதிய அட்டேட்!

04:49 PM Jun 12, 2024 IST | Web Editor
பிரபுதேவா நடிக்கும்  பேட்ட ராப்  திரைப்படத்தில் சன்னி லியோன்   வெளியானது புதிய அட்டேட்
Advertisement

பிரபுதேவா நடிக்கும் `பேட்ட ராப்' திரைப்படத்தில் சன்னி லியோன் நடிக்க உள்ளதாக படக்குழு தகவல் தெரிவித்துள்ளது.

Advertisement

நடன இயக்குநராக இருந்து நடிகர்,  இயக்குநர் என பாலிவுட் வரை வெற்றிகரமாக வலம் வருபவர் பிரபு தேவா.  அண்மை காலமாக படங்களை இயக்குவதை விடுத்து நாயகனாக நடித்து வருகிறார்.  தமிழில் இவர் நடிப்பில் இறுதியாக வெளியான பொய்க்கால் குதிரை, பாகீரா ஆகிய திரைப்படங்கள் கலவையான விமர்சனங்களைப் பெற்றது. தற்போது விஜய்யின் ‘கோட்’ திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

பிரபுதேவா நடிக்கும் 'பேட்ட ராப்' திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு! - News7 Tamil

இந்நிலையில்,  மலையாள இயக்குநர் எஸ்.ஜே.சினு இயக்கத்தில் பிரபுதேவா கதாநாயகனாக நடிக்கும் திரைப்படம் ‘பேட்ட ராப்’ .  இந்த திரைப்படத்தின் கதாநாயகியாக நடிகை வேதிகா நடித்துள்ளார்.  புளூ ஹில் பிலிம்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்த திரைப்படத்திற்கு டி. இமான் இசையமைக்கிறார்.

இதையும் படியுங்கள் : ரஜினிகாந்த் நடிக்கும் ‘கூலி’ திரைப்படத்தின் முதற்கட்ட படப்படிப்பு எப்போது?

மேலும், விவேக் பிரசன்னா,  பகவதி பெருமாள்,  ரமேஷ் திலக்,  கலாபவன் ஷாஜோன்,  மைம் கோபி,  ரியாஸ் கான் உள்ளிட்ட பலர் இந்த திரைப்படத்தில் நடித்துள்ளனர். மேலும், பாலிவுட் நடிகை சன்னி லியோன் ஒரு பாடலுக்கு நடனமாடி இருக்கிறார். இந்த திரைப்படத்தின் ஆடியோ உரிமையை பிரபல நிறுவனமான டிசீரிஸ் கைப்பற்றி இருக்கிறது. மேலும், இந்த திரைப்படத்தில் சுமார் 10 பாடல்கள் இடம்பெற்றிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

Tags :
Advertisement