For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

கரூர் துயரம் - ” திட்டமிட்டு பொய்களை பரப்பும்போது, உண்மையை விளக்குவது கடமையாகிறது”- முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிவு..!

கரூரில் துயரம் தொடர்பாக அரசு மீது திட்டுமிட்டு பொய்களை பரப்பப்படும்போது உண்மையை விளக்குவது கடமையாகிறது என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிவிட்டுள்ளார்.
03:58 PM Oct 15, 2025 IST | Web Editor
கரூரில் துயரம் தொடர்பாக அரசு மீது திட்டுமிட்டு பொய்களை பரப்பப்படும்போது உண்மையை விளக்குவது கடமையாகிறது என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிவிட்டுள்ளார்.
கரூர் துயரம்   ” திட்டமிட்டு பொய்களை பரப்பும்போது  உண்மையை விளக்குவது கடமையாகிறது”  முதல்வர் மு க ஸ்டாலின் பதிவு
Advertisement

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்,

Advertisement

“கரூரில் நிகழ்ந்த பெருந்துயரம் தொடர்பாக எந்த ஒரு தனிநபர் மீதும் பழிசுமத்திப் பலிகடா ஆக்குவது நமது நோக்கம் இல்லை. எனினும், திட்டமிட்டு அரசு மீது பொய்களைச் சிலர் பரப்பும்போது, நடந்த உண்மையை விளக்க வேண்டியது கடமையாகிறது.

இனி இப்படி நிகழாமல் தடுப்பதற்கான 'நிலையான வழிகாட்டு நெறிமுறை'களை (SOP) அரசு வகுத்து வருகிறது. மாண்பமை உச்சநீதிமன்ற இறுதித் தீர்ப்பின் அடிப்படையில் அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்வோம். அனைத்தையும் விட மனித உயிர்களே விலைமதிப்பற்றது என்ற பொறுப்புணர்வுடன் அனைத்துத் தரப்பினரும் செயல்படுவோம்”

என்று தெரிவித்துள்ளார்.

Tags :
Advertisement