“சுனிதா கெஜ்ரிவால் அடுத்த முதலமைச்சர் என்பது கட்டுக்கதை!” - நியூஸ் 7 தமிழுக்கு ஆம் ஆத்மி எம்பி சஞ்சய் சிங் பிரத்யேக பேட்டி!
சுனிதா கெஜ்ரிவால் அடுத்த முதலமைச்சர் என கூறப்படுவது கட்டுக்கதை என ஆம் ஆத்மி கட்சியின் எம்பி சஞ்சய் சிங் நியூஸ் 7 தமிழுக்கு பிரத்யேக பேட்டி அளித்துள்ளார்.
டெல்லியில் ஆட்சி நடத்தும் ஆம் ஆத்மி அரசு கடந்த 2021 நவம்பரில் புதிய மதுபானக் கொள்கையை அமல்படுத்தியது. இது தனியார் நிறுவனங்களுக்கு சாதகமாக அமைந்துள்ளதாகவும் இதன் வாயிலாக பல கோடி ரூபாய் மோசடி நடந்துள்ளதாகவும் புகார் எழுந்தது. இது தொடர்பாக சிபிஐ, அமலாக்கத் துறை ஆகிய இரு புலனாய்வு அமைப்புகளும் தனித்தனியே வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றன.
இதே வழக்கில் ஆம் ஆத்மி கட்சியின் எம்.பி.யான சஞ்சய் சிங் கடந்த ஆண்டு அக்டோபரில் கைது செய்யப்பட்டு, திகார் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். அவரது ஜாமீன் மனுவை உயர் நீதிமன்றமும் தள்ளுபடி செய்தது. இதையடுத்து அவர் மேல்முறையீடு செய்த நிலையில், கடந்த 02.04.2024 - அன்று சஞ்சய் சிங்கிற்கு உச்ச நீதிமன்றம் ஜாமின் வழங்கி உத்தரவிட்டது.
கேள்வி: 6 மாத கால சிறைக்கு பிறகு தற்போது ஜாமில் வெளிவந்துள்ளீர்கள் இந்த தருணம் எப்படி உள்ளது*
பதில் : 6 மாதம் சிறையில் இருந்தது என் மன உறுதியை மேலும் வலிமைப்படுத்தி உள்ளது. சிறையிலிருந்தும் பாஜகவுக்கு எதிராக இன்னும் அதிகமாக சண்டையிட வேண்டும் என்று தான் தோன்றியது. நான் சிறையில் இருந்து வெளிவந்தும் அதை தான் செய்து வருகிறேன்
கேள்வி : சுனிதா கெஜ்ரிவால் அடுத்த முதலமைச்சர் என கூறப்படுவது எந்த அளவுக்கு உண்மை?
பதில்: அவையெல்லாம் கட்டுக் கதை... அரவிந்த் கெஜ்ரிவால் டெல்லியின் முதலமைச்சர் ஆக இருந்தார் எப்போதும் இருப்பார். அவர் தான் முதலமைச்சர்.
இவ்வாறு சஞ்சய் சிங் எம்பி கூறினார்.