புதுச்சேரி துணைநிலை ஆளுநரை திடீரென சந்தித்த #actorvijaysethupathy! ஏன் தெரியுமா?
படப்பிடிப்பிற்காக புதுச்சேரி சென்ற நடிகர் விஜய் சேதுபதி இன்று மரியாதை நிமித்தமாக அந்த மாநில துணைநிலை ஆளுநர் கைலாசநாதனை ஆளுநர் மாளிகையில் சந்தித்தார்.
குரங்கு பொம்மை படத்தை இயக்கிய நிதிலன் சுவாமிநாதன், நடிகர் விஜய் சேதுபதியை வைத்து இயக்கிய திரைப்படம் மகாராஜா. இப்படத்தை சுதன் சுந்தரம் மற்றும் ஜெகதீஷ் பழனிச்சாமி இணைந்து தயாரித்தனர். இத்திரைப்படம் கடந்த ஜூன் 14-ம் தேதி வெளியானது. வெளியான முதல் நாளிலிருந்தே மக்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்று வந்தது. விஜய் சேதுபதியின் 50-வது திரைப்படமான இந்தப் படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றதோடு, கதாநாயகனாக விஜய் சேதுபதிக்கும் ஒரு நல்ல கம்பேக் திரைப்படமாக அமைந்தது.
ஒரு சாதாரண கதையை நிதிலன் அவரது நான் லீனியர் திரைக்கதை யுக்தியால் படத்தை மிகமிக சுவாரசியமாகவும், விறுவிறுப்பாகவும் இயக்கி மக்கள் மத்தியில் கொண்டு சேர்த்தார். இதன் எதிரொலியால், படத்தின் வசூல் ரூ.100 கோடியை தாண்டியது. திரையரங்கைத் தொடர்ந்து ஓடிடியில் வெளியான மகாராஜா ரசிகர்களை அதிகம் கவர்ந்தது.
தற்போது விஜய் சேதுபதி 2 படங்களை கைவசம் வைத்துள்ளார். மிஷ்கின் இயக்கி வரும் ‘ட்ரைன்’ என்ற திரைப்படத்திலும், பாண்டிராஜ் இயக்கத்தில் உருவாகும் புதிய திரைப்படத்திலும் விஜய் சேதுபதி நடித்து வருகிறார்.
இந்த நிலையில், படப்பிடிப்பிற்காக புதுச்சேரி சென்ற நடிகர் விஜய் சேதுபதி இன்று மரியாதை நிமித்தமாக அம்மாநில துணைநிலை ஆளுநர் கைலாசநாதனை ஆளுநர் மாளிகையில் சந்தித்தார்.