"வாழ்வின் அனைத்து படிகளிலும் சிறக்க வேண்டும்" - பிளஸ் 2 மாணவர்களுக்கு இபிஎஸ் வாழ்த்து!
தமிழ்நாட்டில் 12ம் வகுப்பு பொதுத்தோ்வு மாா்ச் 3ம் தேதி தொடங்கி 25ம் தேதியுடந் நிறைவு பெற்றது. இந்த தேர்வினை பள்ளிகளில் இருந்து 3 லட்சத்து 78 ஆயிரத்து 545 மாணவர்களும், 4 லட்சத்து 24 ஆயிரத்து 23 மாணவிகளும், தனித்தேர்வர்களாக 18 ஆயிரத்து 344 பேரும், சிறைவாசிகள் 145 பேரும் என மொத்தம் 8 லட்சத்து 21 ஆயிரத்து 57 பேர் எழுதினார்கள். ஏப்ரல் 4ம் தேதி விடைத்தாள் திருத்தும் பணி தொடங்கியது.
தொடர்ந்து, கடந்த 15ஆம் தேதி, அதாவது திட்டமிட்டதற்கு முன்கூட்டியே விடைத்தாள் திருத்தும் பணி நிறைவடைந்தது. இந்த நிலையில் இன்று (மே 8) +2 தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளன. இந்த ஆண்டு தேர்வு முடிவுகள் நாளை வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், விடைத்தாள் திருத்தும் பணிகள் முன்பே நிறைவு பெற்றதால் 1 நாள் முன்கூட்டியே முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.
இதில் 7, 53,142 மாணவ, மாணவிகள் தேர்ச்சி அடைந்துள்ளனர். 4,05,472 (96.70 சதவிகிதம்) மாணவிகளும், 3,47,670 (93.16 சதவிகிதம்) மாணவர்களும் தேர்ச்சி பெற்றுள்ளனர். இந்த நிலையில், பிளஸ் 2 மாணவர்களுக்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
+2 தேர்வு முடிவுகள் இன்று வெளியாகியுள்ள நிலையில், தேர்ச்சி பெற்ற மாணவர்கள், உயர்கல்விக்கான விருப்பமிக்க, மற்றும் சரியான திசையைத் தேர்ந்தெடுத்து, வாழ்வின் அனைத்து படிகளிலும் சிறக்க வேண்டும் என வாழ்த்துகிறேன்.
தேர்ச்சி பெறத் தவறியவர்கள்
துவண்டுவிட வேண்டாம்.
You haven't failed;… pic.twitter.com/UQShVfvYNS— Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK (@EPSTamilNadu) May 8, 2025
இதுகுறித்து இபிஎஸ் எக்ஸ் தளத்தில் கூறியிருப்பதாவது,
"+2 தேர்வு முடிவுகள் இன்று வெளியாகியுள்ள நிலையில், தேர்ச்சி பெற்ற மாணவர்கள், உயர்கல்விக்கான விருப்பமிக்க, மற்றும் சரியான திசையைத் தேர்ந்தெடுத்து, வாழ்வின் அனைத்து படிகளிலும் சிறக்க வேண்டும் என வாழ்த்துகிறேன். தேர்ச்சி பெறத் தவறியவர்கள் துவண்டுவிட வேண்டாம். You haven't failed; Your success is just postponed for a while, மீண்டும் நன்றாகப் புரிந்து படித்து, துணைத் தேர்வை அணுகுங்கள்; நிச்சயம் தேர்ச்சி அடைவீர்கள்! நீங்கள் ஒவ்வொருவரும் வெற்றியாளர்கள் தான்! உங்களுக்கும் எனது Advance வாழ்த்துகள்!"
இவ்வாறு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.