சென்னையில் புறநகர் ரயில் சேவை ரத்து - தெற்கு ரயில்வே அறிவிப்பு !
சென்னை கடற்கரை - எழும்பூர் இடையே சோதனை ஓட்டம் நடைபெறுவதால் ரயில் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
07:12 AM Mar 09, 2025 IST | Web Editor
Advertisement
சென்னை கடற்கரை - எழும்பூர் இடையே அமைக்கப்பட்டுள்ள 4வது வழித்தடத்தில் இன்று ரயில் சோதனை ஓட்டம் நடைபெற உள்ளது. இதன் காரணமாக சென்னை புறநகர் மின்சார ரயில் சேவைகள் ரத்து செய்யப்பட உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
Advertisement
இது தொடர்பாக தெற்கு ரயில்வே சார்பில் அறிவிக்கப்பட்டுள்ள அறிவிப்பின் படி, " சென்னை கடற்கரை - தாம்பரம் இடையே இன்று காலை 05.10 மணி முதல் மாலை 04.10 மணி வரை புறநகர் ரயில் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளன. இருப்பினும் கோடம்பாக்கம் முதல் தாம்பரம் இடையே 30 நிமிட இடைவெளியில் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளன.
அதே சமயம் மாலை 04.10 மணி முதல் ஞாயிறு அட்டவணைப்படி புறநகர் ரயில்கள் இயக்கப்படும்" எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.