பள்ளி மாணவர்களிடையே ஏற்பட்ட மோதலில் ஒருவர் உயிரிழப்பு - நாமக்கலில் பரபரப்பு!
நாமக்கல் அருகே அரசு பள்ளியில் மாணவர்கள் ஒருவரையொருவர் தாக்கி கொண்டதில் ஒரு மாணவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நாமக்கல் மாவட்டம் எருமப்பட்டி அடுத்த நவலடிப்பட்டி பகுதியை சேர்ந்த ஆகாஷ்
(11) என்பவர் வரகூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் 11ம் வகுப்பு படித்து வந்தார். அதே பள்ளியில் 11ம் வகுப்பு படித்து வரும் ரித்தீஷ் (11) ஆகிய இரண்டு மாணவர்கள் இடையே நேற்று மாலை பள்ளி வளாகத்தில் திடீரென வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனால், இரு மாணவர்களும் ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டதாக கூறப்படுகிறது.
இதனை பார்த்த பள்ளி ஆசிரியர்கள் தடுத்துள்ளனர். ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டதில் ஆகாஷ் சம்பவ இடத்திலேயே மயங்கி விழுந்துள்ளார். ஆம்புலன்ஸ் மூலம் எருமப்பட்டி
அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். அங்கு அந்த மாணவரை மருத்துவர்கள் பரிசோதனை செய்தனர். ஆனால், மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே மாணவன் உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதையும் படியுங்கள் : “ #KurskNuclearPowerPlant -ஐ தாக்க முயன்ற உக்ரைன் படைகள் ” - ரஷ்ய அதிபர் புதின்!
இதனையடுத்து மாணவரின் உடல் நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உடற்கூறு ஆய்வுக்காக பரிசோதனை கூடத்தில் வைக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக எருமப்பட்டி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்தனர். பின்னர், சம்பத்தின் போது இருந்த ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களிடம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர். பள்ளியில் சக மாணவர்கள் ஒருவரையொருவர் தாக்கி கொண்டதில் ஒரு மாணவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.