பள்ளி விடுதியில் உயிரை மாய்த்துக்கொண்ட மாணவன் - நிகழ்ந்தது என்ன?
ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அருகே புதுப்பேட்டை பகுதியில் கிறிஸ்துவ நிர்வாகத்தின் கீழ் தூய அந்திரேயர் மேல்நிலைப் பள்ளியின் விடுதி இயங்கி வருகிறது. இந்த விடுதியில் எட்டாம் வகுப்பு கல்வி பயிலும் விஸ்வ கணேஷ் (13) என்பவர் அவர் தங்கி இருந்த விடுதி அறையில் உயிரை மாய்த்துக்கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனை தொடர்ந்து அத்தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல் துறையினர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும், இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்க்கொண்டதில், பரமேஸ்வர மங்கலம் பகுதியைச் சேர்ந்தவர் முரளியின் மகன் விஷ்வ கணேஷ், தான் தந்தை இறந்து கடந்த சில நாட்களுக்கு முன்பு தான் இந்த விடுதியில் வந்து சேர்ந்துள்ளார் என்பதும் தெரியவந்துள்ளது.
மேலும் இந்த விடுதியில் 17 பேர் தங்கி வரும் நிலையில் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படும் விஷ்வ கணேஷ் உடன் அறையில் 10 பேர் தங்கி உள்ளதாகவும் விசாரணையில் தெரிய வந்துள்ளது. இந்நிலையில், விஷ்வ கணேஷ் கடுமையான வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்தார் எனவும், இதன் காரணமாக மருத்துவமனைக்கு சென்று விட்டு பின்னர் விடுதி அறைக்கு வந்த நிலையில் இந்த துயர சம்பவம் நிகழ்ந்துள்ளது எனவும் தகவல் வெளியாகி உள்ளது. இதனைத் தொடர்ந்து அரக்கோணம் சட்டமன்ற உறுப்பினர் ரவி சம்பவ
இடத்திற்கு விரைந்து சென்று நேரில் பார்வையிட்டு விடுதி காப்பாளரிடம் விசாரணையை மேற்கொண்டனர்.