Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

"ஹோலி கொண்டாட்டத்தின் போது அதிக ஒலியெழுப்பினால் கடும் நடவடிக்கை" - முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் எச்சரிக்கை!

ஹோலி பண்டிகை கொண்டாட்டத்தின் போது நடைபெறும் அதிக ஒலியெழுப்பி நிகழ்ச்சிகளை தடுக்க வேண்டும் என்று முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளார்.
08:40 AM Mar 13, 2025 IST | Web Editor
Advertisement

வட மாநிலங்களில் நாளை ஹோலி பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. இந்த நிலையில் அரசு விருந்தினர் மாளிகையில் வளர்ச்சி திட்டங்கள் மற்றும் சட்டம் ஒழுங்கு பிரச்சனை குறித்து ஆய்வு செய்த உத்தர பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், ஹோலி கொண்டாட்டங்களின் போது அதிக ஒலியெழுப்பி டி.ஜே. நிகழ்ச்சிகள் நடத்தப்படுவதை மிகக் கடுமையாக தடுக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.

Advertisement

மேலும், வங்கிகள், நிதி நிறுவனங்கள், கடைகள் மற்றும் வர்த்தக வளாகங்களில் சி.சி.டி.வி. கேமராக்களை பொருத்த வேண்டும். கால்நடைகள் கடத்தப்படுவதை கண்காணிக்கவும், கடத்தல்காரர்கள், வாகன உரிமையாளர்கள் மற்றும் அதற்கு உடந்தையாக இருக்கும் காவல் துறையினர் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.

கால்நடை கடத்தலுக்கு மாநிலத்தில் முழுமையான தடையை திறம்பட செயல்படுத்துவதை உறுதி செய்ய வேண்டும் என்றும், இது தொடர்பாக மாவட்ட வாரியாக மதிப்பாய்வுகளை நடத்த வேண்டும் என்றும் மண்டல ஏ.டி.ஜி. பியூஷ் மோர்டியாவுக்கு உத்தரவிட்டுள்ளார்.

ஹோலி கொண்டாட்டங்களின் போது அசம்பாவிதங்களை தடுக்க கடுமையான விழிப்புணர்வுடன் செயலாற்ற வேண்டும் என்றும் ஒவ்வொரு காவல் நிலையத்தில் இருந்தும் முதல் பத்து குற்றவாளிகளை அடையாளம் காணவும் முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.

Tags :
CHIEF MINISTERHoli celebrationsnoiseStrict ActionWarnsyogi Adityanath
Advertisement
Next Article