For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

வினோத கவிதை, கொடூர கொலை : அமெரிக்காவில் தம்பியை கொன்று அவரின் கண்ணை சாப்பிட்ட அண்ணன்!

அமெரிக்காவில் தனது தம்பியை, அண்ணன் ஒருவர் கொடூரமான முறையில் அடித்துக் கொன்ற சம்பவம் அரங்கேறியுள்ளது.
08:57 PM Feb 27, 2025 IST | Web Editor
வினோத கவிதை  கொடூர கொலை   அமெரிக்காவில் தம்பியை கொன்று அவரின் கண்ணை சாப்பிட்ட அண்ணன்
Advertisement

அமெரிக்காவில் அரங்கேறியுள்ள கொலை சம்பவம் ஒன்று உலகத்தையே அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அமெரிக்காவின் நியூ ஜெர்சி பிரின்ஸ்டன் பல்கலைக்கழகத்திற்க்கு அருகிலுள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் வசிப்பவர் மேத்யூ ஹெர்ட்ஜென். இவருக்கு ஜோசப் என்ற சகோதரர் இருந்தார். இவர்கள் இருவரும் கல்லூரியில் சிறந்த கால்பந்தாட்ட வீரர்கள் ஆவர்.

Advertisement

பிப்ரவரி 22ஆம் தேதி (சனிக்கிழமை) இரவு 11:15 மணியளவில் மேத்யூ ஹெர்ட்ஜென் 911 என்ற காவல் துறை எண்ணிற்கு அழைத்துள்ளார். காவல்துறைக்கு அழைப்பு விடுத்த அவர், அடுக்குமாடி குடியிருப்பில் ஒரு சடலம் கிடப்பதாகவும், தீவிபத்து ஏற்பட்டதாகவும் தெரிவித்துள்ளார். புகாரையடுத்து சம்பவ இடத்திற்கு வந்து பார்த்த காவல்துறையினர், அங்கு கொடூரமாக கொலை செய்யப்பட்டு இறந்து கிடந்த ஜோசப்பின் உடலை கைப்பற்றினர்.

கொலைக்கு ஒருநாள் முன்பு மேத்யூ தனது பூனையுடன் எடுத்துக் கொண்ட படம்

சம்பவ இடத்தில் ஜோசப் ஹெர்ட்ஜெனின்ங சிதைந்த உடல், இரத்தக்கறை படிந்த கத்தி, முள்கரண்டி மற்றும் தட்டு ஆகியவற்றை போலீசார் கண்டுபிடித்தனர். மேலும் தீக்கிரையான பூனை ஒன்றின் உடலையும் கண்டறிந்தனர். தொடர்ந்து அங்கு இருந்த தடயங்களை வைத்து இந்த கொலையை ஜோசப்பின் அண்ணனான  மேத்யூ ஹெர்ட்ஜென்தான் செய்தார் என்பதையும் போலீசார் கண்டறிந்தனர். அவர்தான் தனது சகோதரனை அடித்து, குத்திக் கொன்றதாகவும், தங்களது வீட்டில் வளர்த்து வந்த  பூனையையும்  தீ வைத்துக் கொளுத்தியதாகவும் போலீசார் தெரிவித்தனர்.

மேலும் அவரது கண்ணை மேத்யூ ஹெர்ட்ஜென் கிழித்து சாப்பிட்டுள்ளதாகவும் போலீசார் தெரிவித்தனர். போலீசார் மேத்யூ ஹெர்ட்ஜெனை சம்பவ இடத்திலயே கைது செய்தனர். கொலைக்கு ஒரு பிளேடு மற்றும் ஒரு கோல்ஃப் கிளப் இரண்டையும் மேத்யூ பயன்படுத்தியதாக அவர்கள் நம்புகிறார்கள். குற்றம் நிரூபிக்கப்பட்டால், மேத்யூவுக்கு ஆயுள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படும் என போலீசார் தெரிவித்துள்ளனர். பிரேத பரிசோதனை முடிவுகளுக்குப் பிறகு ஜோசப்பின் மரணத்திற்கான அதிகாரப்பூர்வ காரணம் தெரிவிக்கப்படும் எனவும் போலீசார் தெரிவித்தனர்.

கொலைக்கு சில மாதங்களுக்கு முன்பு ஜோசப் ஹெர்ட்ஜென் சமூக வலைத்தளத்தில் ஒரு வினோதமான கவிதையை பதிவிட்டுள்ளார். அதை வைத்தே இந்த கொலையை அவர்தான் செய்தார் என போலீசார் கண்டறிந்துள்ளனர். அந்த பதிவில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது;

மேத்யூ, ஜோசப்

நீ என்ன படைத்தாய்? ஏன் படைத்தாய்? யாரை கழுத்தை நெரிக்க முயற்சிக்கிறாய்?. நீ எந்தக் கடவுளுக்குச் சேவை செய்கிறாய்? கத்திகள் கூர்மையாவதை என்னால் பார்க்க முடிகிறது. அம்புகள் சத்தமிடுவதை என்னால் கேட்க முடிகிறது. என் இதயம் துடிப்பதை என்னால் உணர முடிகிறது. ஆனால் அவனால் முடியுமா?

அந்த அறையில், சுவர்கள் நடுங்கும் அந்த அறையில் யாரோ ஒருவர் தனியாக அமர்ந்திருக்கிறார்.

அவருக்கு இன்னும் துடிப்பு இருக்கிறது, அவரது நரம்புகளில் இரத்தம் இன்னும் பாய்கிறது. ஆனால் ஏதோ ஒன்று அவரைச் சுற்றிக் கொண்டிருக்கிறது. அவரை அழுத்துகிறது; அவரை மூச்சுத் திணற வைக்கிறது; மூச்சுத் திணற வைக்கிறது.

அவரது காதுகள் மின்னுகின்றன; அவரது முகம் அதிர்கிறது; அவருக்கு வலிக்கிறது. அவர் துடிக்கிறார் ; அவர் தொலைந்துவிட்டார்; அவர் தூங்கிவிட்டார்; அவர் இறந்துவிட்டார்.” என அந்தப் பதிவில் குறிப்பிட்டுள்ளார். எதற்கான மேத்யூ தனது தம்பியை கொன்றார் என இதுவரை தெரியவில்லை. போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags :
Advertisement