For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

#STR49 | “கட்டம் கட்டி கலக்குறோம்” - அடுத்த படத்திற்கான அப்டேட்டை வெளியிட்டார் நடிகர் சிலம்பரசன்!

06:17 PM Oct 21, 2024 IST | Web Editor
 str49   “கட்டம் கட்டி கலக்குறோம்”   அடுத்த படத்திற்கான அப்டேட்டை வெளியிட்டார் நடிகர் சிலம்பரசன்
Advertisement

நடிகர் சிம்பு தனது அடுத்த படத்திற்கான அப்டேட்டை வெளியிட்டுள்ளார்.

Advertisement

சிலம்பரசன் நடித்த `பத்து தல’ திரைப்படம் மக்கள் மத்தியில் சிறப்பான வரவேற்பை பெற்றது. அதைத்தொடர்ந்து இயக்குனர் மணி ரத்னம் இயக்கியுள்ள தக் லைஃப் திரைப்படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் சிம்பு நடித்துள்ளார். இதை தொடர்ந்து தேசிங்கு பெரியசாமி இயக்கவுள்ள STR 48 திரைப்படத்தில் சிலம்பரசன் நடிக்கவுள்ளார். இப்படம் ஒரு பெரிய வரலாற்று பின்னணி கதைக்களத்துடன் உருவாகும் திரைப்படமாகும்.

இந்நிலையில் சிம்பு அவரது எக்ஸ் தளத்தில் நேற்று முன்தினம் ஒரு பதிவு ஒன்றை பகிர்ந்தார். அது இணையத்தில் வைரலானது. அதில் அவர் “2000 களில் நடித்த படங்களான தம், மன்மதன், வல்லவன், விடிவி, இவையெல்லாம் சேர்த்து ஜென் சி மோடில் அப்படி இருக்க போறது நம்முடைய அடுத்த திரைப்படம்” என பதிவிட்டுள்ளார்.

அதைத்தொடர்ந்து நேற்று (அக். 20) அடுத்த பதிவை அவரது எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருந்தார். அதில் “டேய் 2கே கிட்ஸ், 90ஸ் மூட்ல நாளைக்கு 6.06 மணிக்கு ஷார்ப்பா வரேன்” என பதிவிட்டிருந்தார். இதனால் ரசிகர்கள் மிகவும் எதிர்ப்பார்ப்புடன் காத்துக் கொண்டிருந்தனர். இப்படம் அவரது 50- வது திரைப்படத்தை குறிக்கிறது அதை அவரே இயக்கவும் உள்ளார் என்ற செய்திகள் பரவின.

https://twitter.com/SilambarasanTR_/status/1848342488849011196

இந்நிலையில், இன்று (அக். 21) மாலை 6.06 மணிக்கு சிம்பு தனது 49வது படத்திற்கான அப்டேட்டை வெளியிட்டுள்ளார். அதன்படி, அடுத்த படத்தை இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து இயக்கவுள்ளதாகவும் அப்படத்தின் பெயர் “கட்டம் கட்டி கலக்குறோம்” எனவும் வெளியிட்டுள்ளார். STR -ன் இந்த பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Tags :
Advertisement