For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

புயல், வெள்ள நிவாரண நிதி - மத்திய அரசுக்கு உத்தரவிடக் கோரி தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்கு!

09:22 AM Apr 03, 2024 IST | Web Editor
புயல்  வெள்ள நிவாரண நிதி   மத்திய அரசுக்கு உத்தரவிடக் கோரி தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்கு
Advertisement

 புயல், மழை வெள்ள பாதிப்புகளுக்கு ரூ.2,000 கோடி இடைக்கால நிவாரணநிதி வழங்க மத்திய அரசுக்கு உத்தரவிடக் கோரி உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு மனுத்தாக்கல் செய்துள்ளது. 

Advertisement

மிக்ஜாம் புயலால் வடதமிழகத்தை சேர்ந்த சென்னை,  திருவள்ளூர்,  செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் கடந்த டிச.3, 4-ம் தேதிகளில் பெய்த அதி கனமழையால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.  போர்க்கால அடிப்படையில் மீட்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டன.  மக்களால் பாதிப்பில் இருந்து மீண்டு வர முடியாத அளவுக்கு பாதிப்பின் தீவிரம் அதிகம்.  இதே போல், தூத்துக்குடி, நெல்லை உள்ளிட்ட மாவட்டங்களிலும் பெய்த கனமழையால் பெரும் வெள்ளம் ஏற்பட்டு பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.

இதையும் படியுங்கள் : போதைப்பொருள் கடத்தல் வழக்கு – இயக்குநர் அமீரிடம் நடந்த என்சிபி விசாரணை 10 மணி நேரத்திற்கு பின் நிறைவு!

புயல் மற்றும் கனமழை காரணமாக ஏற்பட்ட இழப்புகளை சரி செய்யவும்,  நிவாரணம் வழங்கவும் ரூ. 37, 907 கோடி வழங்க கோரி தமிழ்நாடு முதலமைச்சர் மத்திய அரசுக்கு கடிதம் எழுதினார்.  மேலும், இது தொடர்பான விவரங்கள் தமிழ்நாடு அரசால் மத்திய நிதியமைச்சகத்திடமும் அளிக்கப்பட்டது.

இந்நிலையில், தமிழ்நாட்டில் ஏற்பட்ட புயல், மழை வெள்ள பாதிப்புகளுக்கு ரூ.2,000 கோடி இடைக்கால நிவாரணநிதி வழங்க மத்திய அரசுக்கு உத்தரவிடக்கோரி உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு மனுத்தாக்கல் செய்துள்ளது.  அதில் தமிழ்நாட்டிற்கான வெள்ள நிவாரண நிதியை உடனடியாக விடுவிக்க உரிய உத்தரவை பிறப்பிக்க வேண்டும் எனவும் தமிழ்நாடு அரசின் மனுவில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

Tags :
Advertisement