For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

கின்னஸ் சாதனை படைத்த ஸ்டாட்லரின் ஹைட்ரஜன் பயணிகள் ரயில்!

06:16 PM Mar 28, 2024 IST | Web Editor
கின்னஸ் சாதனை படைத்த ஸ்டாட்லரின் ஹைட்ரஜன் பயணிகள் ரயில்
Advertisement

ஸ்டாட்லர் நிறுவனத்தின் ஹைட்ரஜன் பயணிகள் ரயில் இரண்டு நாட்கள் பயணம் நிற்காமல் 2,803 கிமீ பயணம் செய்து உலக சாதனை படைத்துள்ளது. 

Advertisement

சுவிட்சர்லாந்து நிறுவனமான ஸ்டாட்லர் ரெயில் உருவாக்கிய ஹைட்ரஜன் எரிபொருள் பயணிகள் ரயில் 1,741.7 மைல் தூரம் வரை இரண்டு நாட்கள் நிற்காமல் பயணம் செய்து கின்னஸ் சாதனை படைத்துள்ளது. ஸ்டாட்லர் நிறுவனம் தனது ஹைட்ரஜன் எரிபொருள் ரயிலை ( Flirt H2) முதன்முதலில் பெர்லினில் இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைப்பெறும் வர்த்தக கண்காட்சியில் ( InnoTrans 2022) அறிமுகப்படுத்தியுள்ளது.

இதன்பின் சுவிட்சர்லாந்தில் பலமுறை சோதனை நடத்தியுள்ளது. பல சோதனைகளுக்கு பிறகு ஒரு முழு ஹைட்ரஜன் டேங் மூலம் 2,803 கிமீ வரை இந்த ஹைட்ரஜன் ரயில் சென்றுள்ளது. இதுகுறித்து ஸ்டாட்லரின் துணைத் தலைவர் டாக்டர் அன்ஸ்கர் ப்ரோக்மேயர் கூறியுள்ளதாவது;

"இந்த உலக சாதனையானது எங்களின் FLIRT H2 ( ஹைடரஜன் ரயில்) இன் சிறந்த செயல்திறனை காட்டுகிறது.  இது ஒரு மகத்தான சாதனையாகும். இன்னொரு உலக சாதனையை படைத்ததில் நாங்கள் அனைவரும் பெருமை அடைகிறோம்” என தெரிவித்துள்ளார்.

Tags :
Advertisement