விசிகவிற்கு மாநில கட்சி அங்கீகாரம் - பானை சின்னம் ஒதுக்கீடு!
இதுகுறித்து தேர்தல் ஆணையம் விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு அளித்துள்ள நோட்டிஸில்,
“2024 மக்களவைத் தேர்தலின் முடிவுகளின் அடிப்படையில், தமிழ்நாட்டில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியை மாநிலக் கட்சியாக அங்கீகரித்துள்ளது. கட்சியின் கோரிக்கையை கருத்தில் கொண்டு, பானை சின்னம் தமிழ்நாட்டில் அடையாளமாக விசிக கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது” என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஒரு கட்சியை தேர்தல் ஆணையம் மாநில கட்சியாக அறிவித்தால், அந்த கட்சி தங்களுக்கென தனி சின்னத்தை தேர்வு செய்து அதனை கட்சியின் சின்னமாக பெற முயற்சி மேற்கொள்ளலாம். அதன்படி, விசிக தங்களுக்கு பானை சின்னம் வேண்டும் என்று கோரியபடி அந்தக் கட்சிக்கு பானை சின்னத்தை முன்பதிவு செய்திருக்கிறது. இனி விசிக போட்டியிடும் தோ்தல்களில் அந்தக் கட்சி பானை சின்னம் கோரினால் அதை தேர்தல் ஆணையம் ஒதுக்கும்.
விடுதலைச் சிறுத்தைகள் கட்சி அங்கீகரிக்கப்பட்ட மாநில கட்சி என்னும் அங்கீகாரத்தை இந்திய தேர்தல் ஆணையம் இன்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு பானை சின்னத்தை தேர்தல் சின்னமாக அதிகாரப்பூர்வமாக இன்று இந்திய தேர்தல் ஆணையம் வழங்கியுள்ளது. pic.twitter.com/6F4hB98yGx
— Thol. Thirumavalavan (@thirumaofficial) January 10, 2025
இந்நிலையில், இதுகுறித்து அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் தனது ட்விட்டர் (எக்ஸ்) பக்கத்தில், “விடுதலைச் சிறுத்தைகள் கட்சி அங்கீகரிக்கப்பட்ட மாநில கட்சி என்னும் அங்கீகாரத்தை இந்திய தேர்தல் ஆணையம் இன்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு பானை சின்னத்தை தேர்தல் சின்னமாக அதிகாரப்பூர்வமாக இன்று இந்திய தேர்தல் ஆணையம் வழங்கியுள்ளது” என தெரிவித்துள்ளார். அத்துடன் தேர்தல் ஆணையத்தின் அறிக்கையையும் இணைத்து பதிவிட்டுள்ளார்.