For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

அலுவலகம் வர CEO-வுக்கு ஜெட் வசதி செய்து தரும் #Starbucks?

04:18 PM Aug 21, 2024 IST | Web Editor
அலுவலகம் வர ceo வுக்கு ஜெட் வசதி செய்து தரும்  starbucks
Advertisement

ஸ்டார்பக் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக பொறுப்பேற்கவுள்ள பிரையன் நிக்கோல் தான் அலுவலகம் செல்ல, ஜெட் வசதி கேட்டு கடிதம் எழுதியுள்ளார். 

Advertisement

சிபோடிலின் தலைமை நிர்வாக அதிகாரியான பிரையன் நிக்கோல், காபி நிறுவனமான ஸ்டார்பக்ஸ் நிறுவனத்திற்கும் தலைமை நிர்வாக அதிகாரியாக அடுத்த மாதம் முதல் பொறுப்பேற்கவுள்ளார்.

இந்நிலையில் தான் பணிபுரிய ஜெட் ஒன்றை கடிதம் மூலம் கேட்டுள்ளார் பிரையன். ஏனெனில் பிரையன் கலிபோர்னியாவில் வசித்து வருகிறார்; ஆனால், ஸ்டார்பக்ஸ் தலைமை அலுவலகம் சியாட்டிலில் உள்ளது. இதனால் அவர் ஒவ்வொரு முறையும் 1600 கி.மீ. பயணம் செய்ய வேண்டியிருக்கும்.

ஸ்டார்பக் நிறுவன விதிகளின் வாரத்தில் மூன்று நாட்கள் ஊழியர்கள் அலுவலகத்தில் இருந்தே பணிபுரிய வேண்டும். இதனால் பிரையன் மூன்று நாட்கள் கட்டாயம் அலுவலகம் வரவேண்டிய சூழல் உள்ளது. இதனையடுத்து தனது பயணத்திற்காக, ஒரு ஜெட் விமானத்தைக் கோரிய பிரையன், அதற்காக கடிதம் அனுப்பியுள்ளார்.

இதுபோன்ற பெரிய நிறுவனங்களில் சராசரி ஊழியருடன் ஒப்பிடும் போது, அதிக திறன் வாய்ந்த உயர் பதவியில் உள்ள நிர்வாகிகளுக்கு இத்தகைய வசதிகளை செய்து கொடுப்பது பொதுவானவையே. பிரையனுக்கு ஒவ்வோரு ஆண்டும் 1.6 மில்லியன் டாலர் அடிப்படை சம்பளமாக வழங்கப்பட உள்ளது. மேலும், அவரது செயல்திறனைப் பொறுத்து, வெகுமதியாக 3.6 மில்லியன் டாலர் முதல் 7.2 மில்லியன் டாலர் வரை வழங்கப்படலாம்.

மேலும், ஸ்டார்பக்ஸின் தற்போதைய சரிவின் காரணமாக, பிரையனுக்கு தேவையான வசதிகள் செய்து தரப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. ஏனெனில், நிறுவனங்களின் சிக்கல்களைத் தீர்ப்பதில், பிரையன் வலுவான சாதனை படைத்துள்ளார். அவர், சிபோட்டிலின் தலைமை நிர்வாக அதிகாரியாக இருந்தபோது, அதன் பங்கு 773 சதவிகிதம் உயர்ந்ததாகவும் கூறப்படுகிறது.

Tags :
Advertisement