அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் தொடங்கியது
சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக கட்சியின் தலைமை அலுவலகத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அனைத்து மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற்று வருகிறது. இதில் அதிமுகவை சேர்ந்த அனைத்து மாவட்ட செயலாளர்களும் அதிமுக தலைமை அலுவலகத்திற்கு வருகை தந்துள்ளன.
இந்த மாவட்ட ஆலோசனைகூட்டத்தில் 2026 தேர்தல் வியூகம், முக்கிய தீர்மானங்கள், தேர்தல் தயாரிப்புகள் மாவட்ட அமைப்புகளில் மாற்றங்கள், மற்றும் கூட்டணி குறித்து முக்கிய முடிவுகள் எடுக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வருகின்ற 2026 சட்டமன்றத் தேர்தலில் களப்பணி ஆற்றுவது குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட இருக்கிறது. மேலும் இந்திய தேர்தல் ஆணையத்தால் அறிவிக்கப்பட்ட SIR வாக்காளர் சிறப்பு திருத்தம் தொடர்பாக ஆலோசிக்கப்பட உள்ளது
மேலும், குறிப்பாக அ.தி.மு.க.வில் இருந்து முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் நீக்கப்பட்ட நிலையிலும், ஓ.பன்னீர்செல்வம், டி.டி.வி.தினகரன், செங்கோட்டையன் ஒன்றாக சந்தித்த நிலையிலும் அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற்று வருவது அரசியலில் முக்கியத்துவம் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.