"2026ல் மீண்டும் முதலமைச்சராக ஸ்டாலின் தான் வருவார்" - அமைச்சர் மூர்த்தி பேட்டி!
மதுரை ஜெய்ஹிந்த்புரம் பகுதியில் உள்ள தனியார் மண்டபத்தில் வணிகவரி மற்றும் பத்திரப்பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி முன்னிலையில் அதிமுக வட்ட கழக செயலாளர் சரவணன் தலைமையில் 500க்கும் மேற்ப்பட்ட ஆண்கள், பெண்கள் திமுகவில் இணைந்து கொண்டனர்.
இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமைச்சர் மூர்த்தி, இந்த பகுதியில் அதிமுகவிலிருந்து வட்டச் செயலாளர் மரக்கடை சரவணன் தலைமையில் 500 க்கும் மேற்பட்டோர் திமுகவில் இணைந்துள்ளனர்.
இது இன்னும் திமுகவுக்கு வலு சேர்க்கும். அரசின் சார்பில் இந்த பகுதிக்கு அனைத்து தரப்பு மக்களுக்கும் பல்வேறு நலத்திட்ட உதவிகளும் செய்து வந்துள்ளோம். முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு நார்வே நாட்டில் தான் மேற்கே சூரியன் உதிக்கும் மதுரையில் மேற்கில் உதிக்காது என கூறி வருகிறாரே என்ற கேள்விக்கு பதிலளித்தவர், "பொறுத்திருந்து பாருங்கள். 2026ல் மீண்டும் முதலமைச்சராக ஸ்டாலின் தான் வருவார். மேற்கு தொகுதியில் திமுக தான் வெற்றி பெறும்.
திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு வழு சேர்க்கும் வகையில் ஜெயந்திபுரம் அதிமுக பகுதி என்று சொல்வார்கள். திமுக கோட்டையாக மாற்றி இருக்கிறோம் என்றும் மக்கள் பணி செய்வோம் தமிழ் முதலமைச்சரும் துணை முதலமைச்சர் தமிழ்நாடு முழுவதும் பல்வேறு அரசின் நலத்திட்ட உதவிகள் செய்து வருகின்றனர்.
முன்னாள் முதல்வர் கலைஞர் பிறந்தநாளை முன்னிட்டு மேற்கு தொகுதி ஊராட்சி பகுதிகளில் பல்வேறு நலத்திட்டங்கள் வழங்கி மக்கள் கோரிக்கைளை தொடர்ந்து நிறைவேற்றி வருகிறோம். திராவிட முன்னேற்றக் கழகம் வளர்ச்சி அடைத்து வருகிறது.
போன முறை அதிமுக மேற்கு தொகுதியில் வெற்றி பெற்றாலும் 2026 இல் திராவிட முன்னேற்றக் கழக உதய சூரியன் உதித்தே ஆக வேண்டும். விநாயர்கர் சர்த்தி வரும் போது நாங்களும் ஆன்மீகத்தில் நம்பிக்கை உள்ள மக்களுக்கு நம்பிக்கையாக இருந்து உங்களுடன் உருதுணையாக இருந்து அதையும் சிறப்பாக நடத்தி கொண்டிருக்கிறோம்" என்று தெரிவித்துள்ளார்.