For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

கச்சத்தீவு புனித அந்தோனியார் ஆலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம் - ராமேஸ்வரம் மீனவர்கள் புறக்கணிப்பு!

08:47 AM Feb 24, 2024 IST | Web Editor
கச்சத்தீவு புனித அந்தோனியார் ஆலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்   ராமேஸ்வரம் மீனவர்கள் புறக்கணிப்பு
Advertisement

கச்சத்தீவு புனித அந்தோனியார் ஆலய திருவிழா நேற்று தொடங்கி நடைபெற்ற நிலையில், ராமேஸ்வரம் மீனவர்கள் அதனை புறக்கணித்துள்ளனர்.

Advertisement

இந்தியா மற்றும் இலங்கை இடையே நடுக்கடலில் கச்சத்தீவு உள்ளது. இந்த தீவில் உள்ள வரலாற்று சிறப்புமிக்க புனித அந்தோணியார் ஆலயத்தில் ஆண்டுதோறும் திருவிழா நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் 2024 ஆம் ஆண்டிற்கான திருவிழா நேற்று மாலை  5:30 மணியளவில் கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையடுத்து திருப்பலி மற்றும் சிலுவைப்பாதை நடைபெற்றது.

இதையும் படியுங்கள் : WPL 2024 : கடைசி பந்தில் த்ரில் வெற்றி - டெல்லியை வீழ்த்தி மும்பை அபாரம்!

யாழ்ப்பாணம் மறைமாவட்ட ஆயர் அருட்தந்தை ஜஸ்டின் ஞானபிரகாசம் தலைமையில் இன்று காலை சிறப்பு திருப்பலி மற்றும் தேர்பவனி நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு புனித அந்தோணியாரை தரிசனம் செய்தனர். இந்த திருவிழாவிற்கு வருகை தரும் பக்தர்களின் நலன் கருதி பல்வேறு வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

குடிநீர் வசதி, தற்காலிகமாக தங்குமிடம், சாலைகள் துறைமுகங்கள் மற்றும் மின்சார வினியோகம் உள்ளிட்டவை பொதுமக்கள் பயன்பாட்டிற்காக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும், திருவிழாவில் பக்தர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் மருத்துவ குழுக்களை இலங்கை கடற்படை அமைத்துள்ளது.

இந்நிலையில், கச்சத்தீவு திருவிழாவில் கலந்து கொள்வதற்காக 75 விசைப்படகுகளிலும், 24 நாட்டுப்படகுகளிலும் செல்ல மொத்தம் 3,265 பேர் ராமேஸ்வரத்தில் பதிவு செய்திருந்தனர். ஆனால், இந்தியா மற்றும் இலங்கை ஆகிய இருநாட்டின் உறவை மேம்படுத்தும் வகையில் ஆண்டுதோறும் கச்சத்தீவில் நடைபெறும் புனித அந்தோணியார் திருவிழாவிற்கு இலங்கை நீதிமன்றத்தின் உத்தரவை கண்டித்து இந்திய மீனவர்கள் மற்றும் பக்தர்கள் யாரும் பங்கேற்காமல் புறக்கணித்துள்ளனர்.

தமிழ்நாடு கடலோரப் பகுதியில் இருந்து மீன் பிடிக்க செல்லும் மீனவர்களை எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி இலங்கை கடற்படை தொடர்ச்சியாக கைது செய்து சிறையில் அடைத்து வருகின்றனர். மேலும், படகோட்டிகளுக்கு ஆறு மாதம் சிறை தண்டனையும், இரண்டாவது முறையாக கைது செய்யப்படும் மீனவர்களுக்கு ஓராண்டு முதல் இரண்டு ஆண்டு வரை சிறை தண்டனையும் இலங்கை நீதிமன்றம் விதித்து வருகிறது. இதனை கண்டித்து, ராமேஸ்வரம் மீனவர்கள் கச்சத்தீவு திருவிழாவை புறக்கணித்துள்ளனர்.

ராமேஸ்வரத்தில் இருந்து கச்சத்தீவு திருவிழாவில் யாரும் பங்கேற்காத நிலையில், பல்வேறு மாவட்டம் மற்றும் மாநிலத்தில் இருந்து வந்த ஏராளமான பக்தர்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர். மீனவர்கள் விவகாரத்தில் மத்திய, மாநில அரசுகள் பேச்சுவார்த்தை நடத்தி தீர்வை ஏற்படுத்திருக்கலாம் என பக்தர்கள் தெரிவித்தனர். இனிவரும் காலங்களில் அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags :
Advertisement