Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

’SSMB 29’ படத்தின் புரொமோ பாடல் அப்டேட்..!

ராஜமவுலி - மகேஷ்பாபு கூட்டணியில் உருவாகி வரும் புதிய படத்தின் புரொமோ பாடல் ஒன்றை நடிகை சுருதி ஹாசன் பாடியுள்ளார்.
03:10 PM Nov 11, 2025 IST | Web Editor
ராஜமவுலி - மகேஷ்பாபு கூட்டணியில் உருவாகி வரும் புதிய படத்தின் புரொமோ பாடல் ஒன்றை நடிகை சுருதி ஹாசன் பாடியுள்ளார்.
Advertisement

பாகுபலி., ஆர்.ஆர்.ஆர் ஆகிய படங்களை இயக்கியவர் எஸ்.எஸ்.ராஜமவுலி. இவர் தற்போது தெலுங்கு நடிகர் மகேஷ் பாபுவை கதாநாயகனாக கொண்டு உருவாகி வரும்‘எஸ்.எஸ்.எம்.பி 29’ படத்தை இயக்கி வருகிறார். பெரும் பொருட்செலவில் உருவாகி வரும் இப்படம் இந்திய சினிமாவில் மிகவும் எதிர்பார்க்கப்படும் படங்களில் ஒன்றாகும். இந்த படத்தில் மகேஷ் பாபுவுடன் இணைந்து பிரியங்கா சோப்ரா, பிரித்திவிராஜ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். காசியின் வரலாற்றைப் பேசும் கதையாக உருவாகிவரும் இப்படத்திற்கு வாரணாசி என்று பெயர் வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் இப்படத்திற்கு கீரவாணி இசையமைத்துள்ளார்.

Advertisement

ஒடிஷா, ஹைதராபாத்தை தொடர்ந்து தற்போது தென்னாப்பிரிக்காவில் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் வீடியோ வெளியீட்டு நிகழ்வு 15-ம் தேதி மாலை 7 மணிக்கு ஐதராபாத்தில் உள்ள ராமோஜி பிலிம் சிட்டியில் பிரம்மாண்டமாக நடைபெறவுள்ளது. மேலும் இந்த நிகழ்ச்சியை நேரடி ஒளிபரப்பு செய்யும் உரிமையினை ஜியோ ஹாட்ஸ்டார் நிறுவனம் கைப்பற்றி இருக்கிறது.

இந்த நிலையில் இப்படத்தின் ‘குளோப் டிராட்டர்’ என்னும் புரோமோ பாடல் வெளியாகியுள்ளது. இப்பாடலை நடிகை  சுருதி ஹாசன் பாடியுள்ளார்.

 

Tags :
cineamupdatelatestNewsMaheshBabupramosongshrutihassanSSMB29SSRajamouli
Advertisement
Next Article