For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

#SSLVD-3 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது!

09:30 AM Aug 16, 2024 IST | Web Editor
 sslvd 3 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது
Advertisement

புவி கண்காணிப்பு செயற்கைக்கோள் இஒஎஸ்-08 உடன் எஸ்எஸ்எல்வி டி-3 ராக்கெட் இன்று வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது. 

Advertisement

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ, புவி கண்காணிப்பு செயல்பாடுகளுக்காக 175.5 கிலோ எடை கொண்ட அதிநவீன இ.ஓ.எஸ்-08 எனும் செயற்கைக்கோளை வடிவமைத்தது. இந்த செயற்கைக்கோள் சிறியரக எஸ்.எஸ்.எல்.வி டி-3 ராக்கெட் மூலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து இன்று காலை 9.17 மணிக்கு விண்ணில் ஏவப்பட்டது.

இந்த ராக்கெட் பூமியில் இருந்து புறப்பட்டு சரியாக 13 நிமிடத்தில், 475 கிலோ மீட்டர் உயரத்தில் குறைந்த புவி வட்ட சுற்றுப்பாதையில் இந்த செயற்கைக்கோளை வெற்றிகரமாக நிலைநிறுத்த உள்ளது. இ.ஓ.எஸ்-08 செயற்கைக்கோளில் எலக்ட்ரோ ஆப்டிகல் இன்பராரெட் பேலோடு (இ.ஓ.ஐ.ஆர்.), குளோபல் நேவிகேஷன் சாட்டிலைட் சிஸ்டம்-ரிபிளக்டோமெட்ரி பேலோட் (ஜ.என்.எஸ்.எஸ்-ஆர்) மற்றும் எஸ்.ஐ.சி. யுவி டோசிமீட்டர் ஆகிய ஆய்வு கருவிகள் இணைக்கப்பட்டுள்ளன.

இந்த கருவிகளின் பணிக்காலம் ஒரு ஆண்டாகும். இந்த செயற்கைக்கோள் பூமியை 24 மணி நேரமும் கண்காணிக்கும். பேரிடர் கண்காணிப்பு, சுற்றுச்சூழல் கண்காணிப்பு, தீ கண்டறிதல் போன்ற பயன்பாடுகளுக்கு இது பயனுள்ளதாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :
Advertisement