For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் ஆடிப்பூர தேரோட்டம் - கோவிந்தா, கோபாலா முழக்கங்களுடன் கோலாகலம்!

02:31 PM Aug 07, 2024 IST | Web Editor
ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் ஆடிப்பூர தேரோட்டம்   கோவிந்தா  கோபாலா முழக்கங்களுடன் கோலாகலம்
Advertisement

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் ஆடிப்பூர தேரோட்டம் நடைபெற்றது. கோவிந்தா, கோபாலா என கோஷம் எழுப்பி ஆயிரக்கணக்கான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

Advertisement

கோதை பிறந்த ஊர் கோவிந்தன் வாழும் ஊர் என்று பெயர் பெற்றது ஸ்ரீவில்லிபுத்தூர். கோதையாகிய ஸ்ரீஆண்டாள் பிறந்த ஊராகிய இந்த ஸ்ரீவில்லிபுத்தூரில் ஆடிப்புரம் விழா மிக முக்கியமான நிகழச்சியாகும். முதல் திருநாளான அன்று இரவு 16 சக்கர வாகனத்தில் ஸ்ரீ ஆண்டாள், ஸ்ரீரெங்கமன்னார் பவனி நடைபெற்றது. 5 ஆம் திருநாளான கடந்த 3 ஆம் தேதி 5 கருட சேவையும், 7ஆம் திருநாளான கடந்த 5 ஆம் தேதி சயன சேவையும் நடைபெற்றது.

இந்நிலையில் 9 ஆம் திருநாளன ஆடிப்பூர திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான ஆடிப்பூர தேரோட்டம் இன்று நடைப்பெற்றது. திரு ஆடிப்பூர தேர்த் திருவிழாவை காண தமிழ்நாடு மட்டுமின்றி இந்தியாவின் பல பகுதிகளில் இருந்து பல்லாயிரக்கணக்காண பக்தர்கள் பங்கேற்று தேரை வடம் பிடித்து இழுத்தனர். அடிப்பூரம் எனபடுவது ஸ்ரீ ஆண்டாள் பிறந்த
நட்சத்திரமாகும். இந்நாளில் நடைபெறும் இந்த தேரோட்டத்தில் பங்கேற்று ஸ்ரீ
ஆண்டாள், ஸ்ரீ ரெங்கமன்னாரை தரிசனம் செய்தால் வாழ்வில் எல்லா நலன்களும்
பெறலாம் என நம்பப்படுகிறது. மேலும் திருமணம் ஆகாத பெண்கள், ஆண்கள், குழந்தை பாக்கியம் இல்லாத தம்பதிகள் தேரை வடம் பிடித்து இழுத்தால் அவர்கள் நினைத்த காரியம் நிறைவேறும் என்பது ஐதீகம்.

முன்னதாக இன்று அதிகாலை 4.30 மணிக்கு ஸ்ரீ ஆண்டாள், ரெங்கமன்னார் உற்சவர்களுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு, மதுரை கள்ளழகர்
சூடிக்கழைத்த வஸ்திரத்தை உடுத்தி திருத்தேரில் எழுந்தருளச் செய்தனர். தேரோட்டத்தில் பங்கேற்ற பக்தர்கள் "கோவிந்தா கோபாலா" என்ற கோஷத்துடன் வடம் பிடித்து நான்கு ரத வீதிகளின் வழியாக தேரை இழுத்தனர்.

மாவட்ட ஆட்சித் தலைவர் ஜெயசீலன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பொராஸ்கான் அப்துல்லா, சட்டமன்ற உறுப்பினர் மான்ராஜ், ஆண்டாள் கோயில் ஸ்ரீ சடகோப ராமனுஜ ஜீயர், கோவில் அறங்காவலர் குழு தலைவரும் ராம்கோ குரூப் சேர்மனுமான வெங்கட்ராமராஜா உள்ளிட்ட ஊர் முக்கிய பிரமுகர்கள் பலரும் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்து துவக்கி வைத்தனர்.

இன்று விருதுநகர் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை என்பதால், குழந்தைகளோடு பக்தர்கள் ஸ்ரீவில்லிபுத்தூரில் குவிந்தனர். பக்தர்களின் பாதுகாப்பிற்காக 1800 க்கும் மேற்பட்ட காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Tags :
Advertisement