#SrilankaPresidentElection - அதானி குழுமத்திற்கு புதிய நெருக்கடி!
“தேர்தலில் வெற்றி பெற்றால், காற்றாலை மின் உற்பத்தி திட்டத்துக்காக, அதானி குழுமத்துக்கு அளிக்கப்பட்ட ஒப்பந்தத்தை ரத்து செய்வேன்” என இலங்கை அதிபர் தேர்தலில் போட்டியிடும் மார்க்சிஸ்ட் ஜனதா விமுக்தி பெரமுணா கட்சி வேட்பாளர் அனுரா குமார திசநாயகே தெரிவித்துள்ளார்.
இலங்கையில் வரும் 21ஆம் தேதி அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது. இத்தேர்தலில் அதிபர் ரணில் விக்ரமசிங்கே, எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசா, அனுர குமார திசநாயக்க, நாமல் ராஜபக்சே, தமிழ் பொதுவேட்பாளர் அரியநேந்திரன் உட்பட 38 பேர் போட்டியிடுகின்றனர். இந்த தேர்தலில், ஜே.வி.பி., எனப்படும், மார்க்சிஸ்ட் ஜனதா விமுக்தி பெரமுனா கட்சி தலைவர் அனுரா குமார திசநாயகே வெற்றி பெற அதிக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் நேற்று செய்தியாளர்களிடம் திசநாயகே பேசியதாவது;
இந்தியாவை சேர்ந்த அதானி குழுமத்துக்கு வழங்கப்பட்டுள்ள காற்றாலை மின் உற்பத்திக்கான ஒப்புதல், நம் எரிசக்தி இறையாண்மைக்கு அச்சுறுத்தலாக உள்ளது. நாங்கள் தேர்தலில் வெற்றி பெற்றால், அந்த ஒப்புதலை ரத்து செய்வோம்” என தெரிவித்துள்ளார்.