For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

#SrilankaElection | வாக்குப்பதிவு நிறைவு - வாக்கு எண்ணும் பணி தொடக்கம்!

04:39 PM Sep 21, 2024 IST | Web Editor
 srilankaelection   வாக்குப்பதிவு நிறைவு   வாக்கு எண்ணும் பணி தொடக்கம்
Advertisement

இலங்கையில் அதிபர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நிறைவு பெற்றது. உடனடியாக வாக்கு எண்ணும் பணி தொடங்கியது. நாளை பிற்பகல் புதிய அதிபர் யார் என்று தெரிந்துவிடும் என கூறப்படுகிறது.

Advertisement

2019-ம் ஆண்டு இலங்கையில் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டதால், மகிந்த ராஜபக்சவின் குடும்ப ஆட்சிமுறைக்கு எதிராக மக்கள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டனர். இதையடுத்து, அதிபர் பதவியை கோத்தபய ராஜபக்ச ராஜினாமா செய்தார். 2022 ஜூலை 22-ம் தேதி நாடாளுமன்றத்தில் ரகசிய வாக்கெடுப்பு மூலம் இடைக்கால அதிபராக ரணில் விக்ரமசிங்க தேர்வு செய்யப்பட்டார்.

அவரது பதவிக்காலம் நிறைவடையும் நிலையில், அதிபர் தேர்தலுக்கான அறிவிப்பை இலங்கை தேர்தல் ஆணையம் வெளியிட்டது. அதன்படி, இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. இத்தேர்தலில் 38 வேட்பாளர்கள் களம் கண்டனர். இதில், தற்போதைய அதிபர் ரணில் விக்ரமசிங்க, எதிர்க்கட்சி தலைவர் சஜித்பிரேமதாச, தேசிய மக்கள் சக்திதலைவர் அநுர குமார திசாநாயக்க இடையே கடும் போட்டி நிலவியது.

2 மணி நிலவரப்படி, நுவரெலியா 70% வாக்குகள் பதிவாகியுள்ளது. மொனராகலையில் 65% வாக்குகளும் மாத்தறையில் 62% வாக்குகளும் பதிவாகியுள்ளது. ரத்னபுராவில் 60% வாக்குகளும் கொழும்புவில் 60% வாக்குகளும் பதிவாகியுள்ளன.

பரபரப்பாக நடைபெற்ற வாக்குப்பதிவு மாலை 4 மணியுடன் நிறைவு பெற்றது. இதனையடுத்து வாக்கு எண்ணிக்கை உடனடியாக தொடங்கியது. இலங்கையின் புதிய அதிபர் யார் என்று நாளை பிற்பகலுக்குள் தெரிந்துவிடும். அதிபர் தேர்தலையொட்டி நாடு முழுவதும் 61,000 போலீஸார், 9,000 சிவில் பாது­காப்பு படை­யினர் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். தேர்தல் முடிவுகள் நாளை வெளியாகிறது.

Tags :
Advertisement