For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

கலைஞர் நூற்றாண்டு நூலகத்தில் படித்த மாற்றுத்திறனாளி மாணவர் ஶ்ரீகாந்த் வங்கித் தேர்வில் தேர்ச்சி!

07:02 PM Feb 08, 2024 IST | Web Editor
கலைஞர் நூற்றாண்டு நூலகத்தில் படித்த மாற்றுத்திறனாளி மாணவர் ஶ்ரீகாந்த் வங்கித் தேர்வில் தேர்ச்சி
Advertisement

மதுரை கலைஞர் நூற்றாண்டு நூலகத்தில் 4 மாதங்களாக படித்த 
மாற்றுத்திறனாளி மாணவர் ஶ்ரீகாந்த் வங்கித் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளார்.  

Advertisement

மதுரை பழங்காநத்தத்தை சேர்ந்தவர் ஶ்ரீகாந்த் (25).  இவர் பார்வைச் சவால் கொண்டவர்.  ஶ்ரீகாந்தின் தந்தை மாரிமுத்து ஆட்டோ ஒட்டுனராக பணி புரிந்து வருகிறார்.  வீட்டிற்கு ஒரே மகனான ஶ்ரீகாந்த் கடினமாக படித்து பி.ஏ., பி.எட்.,  முடித்துள்ளார்.  பின்னர் போட்டி தேர்வு எழுதி அரசு பணிக்கு செல்ல வேண்டும் என விரும்பியுள்ளார். இதனைத் தொடர்ந்து ஸ்ரீகாந்த் டி.என்.பி.எஸ்.சி, வங்கி தேர்வு உள்ளிட்ட போட்டித் தேர்வுகளை எழுதி வந்துள்ளார்.

இதனிடையே 4 மாதங்களுக்கு முன், மதுரை நத்தம் சாலையில் உள்ள கலைஞர் நூற்றாண்டு நூலக மாற்றுத்திறனாளிகள் பிரிவில் பிரெய்லி முறையில்
வடிவமைக்கப்பட்ட போட்டித் தேர்வு புத்தகங்களை படிக்க தொடங்கியுள்ளார்.  இந்த நிலையில் ஸ்ரீகாந்த் தனியார் வங்கி நடத்திய போட்டி தேர்வில் வெற்றி பெற்று,  உதவி மேலாளராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

இது தொடர்பாக ஸ்ரீகாந்த் கூறியதாவது:

"தேர்வில் வெற்றி பெற்று வங்கி உதவி மேலாளராக தேர்வு செய்யப்பட்டது மகிழ்ச்சி அளிக்கிறது. கலைஞர் நூற்றாண்டு நூலகம் மற்றும் பணியாளர்கள் உதவியுடன் வங்கித்  தேர்வில் வெற்றி பெற முடிந்தது.  கலைஞர் நூற்றாண்டு நூலகத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகள் பிரிவில் என்னைப் போன்ற மாற்றுத்திறனாளிகள் படித்து போட்டி தேர்வுகளில் வெற்றி பெற வேண்டும்."

இவ்வாறு அவர் கூறினார்.

Tags :
Advertisement