For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

ஸ்ரீவைகுண்டம் மருத்துவமனைக்கு “நல்லகண்ணு” பெயர் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு!

01:39 PM Dec 26, 2024 IST | Web Editor
ஸ்ரீவைகுண்டம் மருத்துவமனைக்கு “நல்லகண்ணு” பெயர்   முதலமைச்சர் மு க ஸ்டாலின் உத்தரவு
Advertisement

ஸ்ரீவைகுண்டம் அரசு மருத்துவமனையையை மேம்படுத்தி 'நல்லகண்ணு' பெயர் வைக்கப்படும் என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

Advertisement

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மூத்த தலைவர் நல்லகண்ணுவின் நூற்றாண்டு பிறந்தநாள் விழா கொண்டாடப்படுகிறது. சென்னையில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் நடைபெற்ற இந்த விழாவில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உட்பட மூத்த அரசியல் தலைவர்கள் பலர் கலந்து கொண்டு வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

இந்நிலையில் தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், "தமிழ்நாட்டின் முதுபெரும் பொதுவுடைமைச் சிந்தனையாளரும், விடுதலைப் போராட்ட வீரரும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் தலைவருமான நல்லகண்ணுவின் 100-வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. நமது மாநிலத்திற்கும், தமிழ் மக்களுக்கும் அவர் ஆற்றிய சிறப்பான தொண்டுகளைப் போற்றும்விதமாக, தமிழ்நாடு அரசு 2022-ம் ஆண்டு 'தகைசால் தமிழர்' விருது வழங்கிச் சிறப்பித்தது.

இன்று அவரது நூறாவது பிறந்த நாள் விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று வாழ்த்தியபோது, அவர் விடுத்த கோரிக்கையை ஏற்று, அவர் பிறந்த திருவைகுண்டம் அரசு மருத்துவமனையை சி.டி.ஸ்கேன் வசதியுடன் தரம் உயர்த்தி, கூடுதல் வசதிகளுடன் புதிய மருத்துவமனைக் கட்டடம் அமைத்திட உத்தரவிட்டுள்ளார்கள்.

கடந்த 85 ஆண்டுகளுக்கும் மேலாக மக்கள் பணியையே எப்போதும் தனது தலையாயக் கடமையாகக் கொண்டு செயல்பட்டு வரும் தன்னலமற்ற தகைசால் தமிழர் நல்லகண்ணுவின் பெருமையை போற்றும் வகையில், திருவைகுண்டத்தில் அமையவிருக்கும் புதிய மருத்துவமனை கட்டடத்திற்கு "தோழர் நல்லகண்ணு நூற்றாண்டுக் கட்டடம்" எனப் பெயரிடவும் அதில் கூறப்பட்டுள்ளது.

Tags :
Advertisement