உலக சாதனை புத்தகத்தில் இடம்பிடித்த ஸ்ரீ ராமச்சந்திரா உயர்கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம்!
சென்னை போரூரில் உள்ள ஸ்ரீ ராமச்சந்திரா உயர்கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் ரோட்ராக்ட் அமைப்பினர் சார்பில் 550 பள்ளி மாணவர்களுக்கு இலவசமாக பல்நோக்கு உடல் பரிசோதனை செய்யப்பட்டது. இந்த நிகழ்வு உலக சாதனை புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது.
சென்னை போரூரில் உள்ள ஸ்ரீ ராமச்சந்திரா உயர்கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் சார்ந்த ரோட்ராக்ட் சங்கம் சார்பில் பள்ளி மாணவர்களுக்கு இலவச பல்நோக்கு உடல் பரிசோதனை நடைபெற்றது. இதில் சிறார் நலம், பல், கண், காது, பேச்சு, இயன்முறை, உடல், நுண்ணுயிரியல், சத்துணவு என பல்வேறு துறைகளை சார்ந்த 150 மருத்துவர்கள் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்வில் கலந்துகொண்ட 8 முதல் 15 வயது நிரம்பிய 550 மாணவர்களுக்கு இலவசமாக பல்நோக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது. இந்த நிகழ்வு உலக சாதனை அமைப்பின் (வேர்ல்ட் ரெக்கார்ட் யூனியன்) புத்தகத்தில் உலக சாதனையாக இடம்பெற்றுள்ளது. இந்த சாதனைக்கு காரணமான மருத்துவக் குழுவினரை ஸ்ரீ ராமச்சந்திரா பல்கலைக்கழக வேந்தர் வெங்கடாசலம் அழைத்து கவுரவித்து சான்றுகளை வழங்கினார்.