நாகை மீனவர்கள் மீது #SriLanka கடல் கொள்ளையர்கள் தாக்குதல்: ரூ. 4 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் திருட்டு!
கோடியக்கரை அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த நாகை மீனவர்கள் மீது இலங்கைக் கடற்படையினர் தாக்கியதில் மீனவர்கள் நாகப்பட்டினம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இலங்கை கடற்கொள்ளையர்கள் அத்துமீறி இந்திய கடல்பகுதிக்குள் நுழைந்து தமிழ்நாடு மீனவர்களை தாக்கி பொருட்களை கொள்ளையடித்து செல்லும் சம்பவம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்நிலையில், நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணி அடுத்த செருதூர் மீனவ கிராமத்தை சேர்ந்த தங்கதுரை, அவரது மகன் மணிகண்ட பிரபு, கங்காதரன் உள்ளிட்ட 9 பேர் கோடியக்கரை அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்தனர்.
இந்நிலையில், மீன் பிடித்து கொண்டிருந்த நாகை மீனவர்களை மீது கோடியக்கரை தென்கிழக்கு பகுதியிலிருந்து 3 படகுகளில் வந்த இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர். அப்போது அங்கு அரிவாள், கத்தி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் வந்த இலங்கை கடற்கொள்ளையர்கள் அத்துமீறி மீனவர்களின் படகுகளில் ஏறினர்.
இதையும் படியுங்கள் : 3 ஆண்டுகளில் முதலமைச்சர் #MKStalin-னின் வெளிநாட்டுப் பயணங்களும்…கையெழுத்தான ஒப்பந்தங்களும்…
பின்னர், நாகை மீனவர்களின் படகுகளில் இருந்த என்ஜின், GPS, வாக்கி டாக்கி, வலை, செல்போன் உள்ளிட்ட ரூ. 4 லட்சம் மதிப்பிலான மீன்பிடி உபகரணங்களை திருடி சென்றனர். இலங்கை கடற்கொள்ளையர்களின் தாக்குதலால் காயமடைந்த மீனவர்கள் நாகை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைகாக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.