Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

இலங்கை கடற்கொள்ளையர்கள் அட்டூழியம் | கத்தி முனையில் நாகை மீனவர்களை மிரட்டி பல லட்சம் மதிப்பிலான பொருட்கள் அபகரிப்பு!

02:36 PM Oct 10, 2024 IST | Web Editor
Advertisement

நாகை மீனவ கிராமத்திலிருந்து மீன் பிடிக்க சென்ற 18 மீனவர்களை நடுகடலில் கத்தி முனையில் மிரட்டி மீன் வலை, ஜிபிஎஸ், வாக்கி டாக்கி, மீன் உள்ளிட்ட பல லட்சம் மதிப்பிலான பொருட்களை இலங்கை கடற்கொள்ளையர்கள் பறித்து சென்றுள்ளனர்.

Advertisement

நாகை மாவட்டம் வேளாங்கண்ணி அடுத்த செருதூர் மீனவ கிராமத்திலிருந்து, நேற்று முன்தினம் (அக். 8) ஏராளமான மீனவர்கள் பைபர் படகில் கடலுக்கு மீன் பிடிக்க பிடிக்க சென்றுள்ளனர். தனக்கு சொந்தமான பைபர் படகில் கடலுக்கு மீன் பிடிக்கச் சென்ற ராஜ்குமார் உள்ளிட்ட 5 நபர்கள் நேற்று (அக். 9) இரவு கோடியக்கரையில் இருந்து தென்கிழக்கே 20 நாட்டிக்கல் தூரத்தில் மீன் பிடித்துக் கொண்டிருந்துள்ளனர்.

அப்போது 2 பைபர் படகுகளில் அங்கு வந்த இலங்கையைச் சேர்ந்த தமிழ் பேசக்கூடிய 9 பேர், தங்களிடம் கத்தியை காட்டி மிரட்டி 200 கிலோ வலையை பறித்துச் சென்று விட்டதாக, இன்று (அக். 10) காலை கரை திரும்பிய மீனவர்கள் புகார் அளித்துள்ளனர். இதேபோன்று செல்லையன் செருதூர் என்பவருக்கு சொந்தமான பதிவெண் இல்லாத பைபர் படகில் கடலுக்கு மீன் பிடிக்கச் சென்ற செல்லையன் உள்ளிட்ட 5 பேரை, 3 பைபர் படகுகளில் வந்த இலங்கையைச் சேர்ந்த தமிழ் பேசக்கூடிய 9 பேர், தங்களிடம் கத்தியை காட்டி மிரட்டி 200 கிலோ வலை, ஜிபிஎஸ்-1, சுமார் 100 கிலோ மீன், செல்போன் 3 ஆகியவற்றை பறித்துச் சென்றதாக புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், மகேஸ்வரி செருதூர் என்பவருக்கு சொந்தமான பைபர் படகில் கடலுக்கு மீன் பிடிக்கச் சென்ற செல்வம், தங்கவேல் உள்ளிட்ட 4 பேரிடம் படகுகில் வந்த இலங்கையைச் சேர்ந்த தமிழ் பேசக்கூடிய 3 பேர் கத்தியை காட்டி மிரட்டி திசை காட்டும் ஜிபிஎஸ் கருவி-1, சுமார் 120 கிலோ மீன், வெள்ளி அரைஞான் கயிறு ஆகியவற்றை பறித்துச் சென்றதாக கரை திரும்பிய மீனவர்கள் தெரிவிக்கின்றனர்.

இதேபோல், சத்தியசீலன் செருதூர் என்பவருக்கு சொந்தமான பைபர் படகில் கடலுக்கு மீன் பிடிக்கச் சென்ற 4 மீனவர்களை, 2 பைபர் படகுகளில் வந்த இலங்கையைச் சேர்ந்த தமிழ் பேசக்கூடிய 6 பேர், தங்களிடம் கத்தியை காட்டி மிரட்டி 250 கிலோ மதிப்புள்ள மீன்பிடி வலை, செல்போன் 1. திசை காட்டும் ஜிபிஎஸ் கருவி 1, சுமார் 100 லிட்டர் டீசல் மற்றும் ரேஷன் பொருட்களை பறித்துச் சென்றுள்ளனர்.

காலை கரை திரும்பிய இலங்கை கடல் கொள்ளையர்கள் கத்தி முனையில் தங்களை மிரட்டி தாக்கம் முற்பட்டு மீன்பிடி வலை உள்ளிட்ட மீன் பிடி உபகரண பொருட்களை கொள்ளையடித்து அட்டூழியத்தில் ஈடுபட்டுள்ளனர். மொத்தமாக 4 மீன்பிடி படகில் இருந்த 770 கிலோ வலை, சுமார் 100 லிட்டர் டீசல், மீன்கள், திசை காட்டும் ஜிபிஎஸ் கருவி, செல்போன், டார்ச் லைட் என பல லட்ச ரூபாய் மதிப்பிலான பொருட்களை பறிகொடுத்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து கீழையூர் கடலோர காவல் குழுமம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இலங்கை கடல் கொள்ளையர்களால் தாக்கப்பட்ட சம்பவம் நாகப்பட்டினம் மாவட்ட மீனவர்களிடம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Tags :
FishermanNagapatnamNews7TamilRobberySrilanka
Advertisement
Next Article