ராமேஸ்வரம் மீனவர்களுக்கு அக்டோபர் 23 வரை காவல் - இலங்கை நீதிமன்றம் உத்தரவு
இலங்கைக் கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்ட ராமேஸ்வரத்தைச் சேர்ந்த 30 மீனவர்களுக்கு வருகின்ற அக்டோபர் 23ஆம் தேதி வரை நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டுள்ளது.
07:43 PM Oct 09, 2025 IST | Web Editor
Advertisement
தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்து அட்டூழியம் செய்வது தொடர்ந்து நீடித்துக் கொண்டேதான் இருக்கிறது.
Advertisement
இந்த நிலையில் நேற்றிரவு தனுஷ்கோடிக்கும் தலைமன்னாருக்கும் இடையே மீன்பிடித்துக் கொண்டிருந்த ராமேஸ்வரத்தைச் சேர்ந்த 30 மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்தனர்.
இதனை தொடர்ந்து இலங்கைக் கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்ட மீனவர்களையும், அவர்களது மீன்பிடிப் படகுகளையும் உடனடியாக விடுவிக்கவும் வலியுறுத்தி முதலமைச்சர் மு.க ஸ்டாலின் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய் சங்கருக்கு கடிதம் எழுதினார்.
இந்த நிலையில் கைது செய்யப்பட்ட மீனவர்கள் இலங்கை மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்களை விசாரித்த நீதிமன்றம் 30 பேருக்கும் வருகின்ற அக்டோபர் 23ஆம் தேதி வரை நீதிமன்ற காவல் விதித்து உத்தரவிட்டுள்ளது.