Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

இலங்கை விளையாட்டுத்துறை அமைச்சர் ரோஷன் ரணசிங்க பதவி நீக்கம்!

09:20 PM Nov 27, 2023 IST | Web Editor
Advertisement

இலங்கை விளையாட்டுத்துறை அமைச்சர் ரோஷன் ரணசிங்கவை பதவி நீக்கம் செய்து அதிபர் ரணில் விக்ரமசிங்க உத்தரவிட்டுள்ளார்.

Advertisement

இந்தியாவில் நடைபெற்ற உலகக் கோப்பையில் மோசமான தோல்வியை அடுத்து இலங்கை கிரிக்கெட் வாரியத்தின் நிர்வாகிகளை நீக்கம் செய்தும், வாரிய நிர்வாகத்துக்காக 7 பேர் குழுவை அமைத்தும் அந்நாட்டு விளையாட்டுத் துறை அமைச்சர் ரோஷன் ரணசிங்க உத்தரவு பிறப்பித்தார். இதனைத் தொடர்ந்து, இலங்கை கிரிக்கெட் விவகாரத்தில் அந்நாட்டு அரசு தலையீட்டை அடுத்து ஐசிசி உறுப்பினா் பதவியில் இருந்து இலங்கை கிரிக்கெட் வாரியத்தை சஸ்பெண்ட் செய்து ஐசிசி உத்தரவிட்டது.

இந்த பரபரப்பான சூழலில், இலங்கையில் இன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் பேசிய ரோஷன், “கிரிக்கெட்டை சரிசெய்யும் முயற்சியில் நான் கொல்லப்படலாம். அவ்வாறு நான் கொலை செய்யப்பட்டால் அதிபரும், அதிபரின் ஆலோசகருமே காரணம்.” என்று சர்ச்சை கருத்தை தெரிவித்தார். இந்நிலையில், அமைச்சரவைக் கூட்டம் முடிந்த சில நிமிடங்களில் அமைச்சர் பதவியிலிருந்து ரோஷனை நீக்கி அதிபர் ரணில் விக்ரமசிங்க உத்தரவிட்டுள்ளார்.

Tags :
dissolvednews7 tamilNews7 Tamil UpdatesRanil WickremesingheRoshan RanasingheSports MinistrySrilankaSrilanka Cricket Board
Advertisement
Next Article