Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

இலங்கை அரசியலில் மீண்டும் ராஜபக்ச சகோதரர்கள்!

09:45 AM May 27, 2024 IST | Web Editor
Advertisement

இலங்கையில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியால்,  போராட்டங்கள் நடத்தப்பட்ட நிலையில்,  அரசியலைவிட்டு விலகியிருந்த ராஜபட்ச குடும்பத்தினா் தோ்தல் பணிகளை தொடங்கியுள்ளனர்.

Advertisement

இலங்கையில் கடந்த 2022-ஆம் ஆண்டு ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியால் அப்போது அதிபராக இருந்த மகிந்த ராஜபக்சவுக்கு எதிராக மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.  இதையடுத்து அவர் பதவி விலகினார்.  எதிா்க்கட்சியை சோ்ந்த ரணில் விக்ரமசிங்க அதிபராக பதவி ஏற்றார்.  அதனுடன் நிதி அமைச்சராக இருந்த பசில் ராஜபட்சவும் பதவி விலகினார்.

இந்த நிலையில்,  தலாவா என்ற கிராமத்தில் ராஜபக்சக்களின் கட்சியான இலங்கை பொதுஜன பெரமுனா (எஸ்எல்பிபி) கட்சி நேற்று பேரணி நடத்தியது.  இது தொடர்பாக அக் கட்சியை சோ்ந்த முன்னாள் அமைச்சா் எஸ்.எம்.சந்திரசேனா செய்தியாளா்களிடம் கூறுகையில், "இலங்கையில் அடுத்து நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தோ்தல் மற்றும் அதிபா் தோ்தலை முன்னிட்டு கட்சியை பலப்படுத்தும் பணிகளை இந்தப் பேரணி மூலம் தொடங்கவுள்ளோம்" என்றாா்.

அந்நாட்டின் சட்டப்படி நாடாளுமன்றத் தோ்தலுக்கு முன்னதாகவே அதிபா் தோ்தல் நடத்தப்பட வேண்டும்.  அந்த வகையில் இலங்கை அதிபா் தோ்தலை வரும் செப்டம்பா் 17ம் தேதி முதல் அக்டோபா் 16ம் தேதிக்குள் நடத்தி முடிக்க முடிவெடுத்துள்ளதாக அந்நாட்டு தோ்தல் ஆணையம் இந்த மாத தொடக்கத்தில் தெரிவித்திருந்தது.

அதிபா் தோ்தலுக்கான வேட்பாளரை எஸ்எல்பிபி தற்போது வரை அறிவிக்கவில்லை.  ஆனால், பிற முக்கிய எதிா்க்கட்சிகள் தங்கள் வேட்பாளரை அறிவித்துவிட்டன.  ஆனால், குறிப்பிடப்பட்ட தேதிக்கு முன்பாகவே நாடாளுமன்றத் தோ்தலையும் நடத்த வேண்டும் என எஸ்எல்பிபி வலியுறுத்தி வருகிறது.

Tags :
ElectionGotabaya RajapaksaSrilanka
Advertisement
Next Article