SRHvsLSG | ஹைதராபாத் அணிக்கு 206 ரன்களை இலக்காக நிர்ணயித்த லக்னோ!
நடப்பாண்டு ஐபிஎல் தொடரின் லீக் சுற்று இறுதி கட்டத்தை எட்டியுள்ள நிலையில், இன்று(மே.19) ரிஷப் பண்ட் தலைமையிலான லக்னோ அணி, பேட் கம்மின்ஸ் தலைமையிலான ஹைதராபாத் அணியை எதிர்கொண்டு வருகிறது. உத்திர பிரதேச மாநிலம் ஏகானா கிரிக்கெட் மைதானத்தில் நடக்கும் இந்த போட்டிக்கான டாஸை வென்ற ஹைதராபாத் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.
பேட்டிங்கை தொடர்ந்த லக்னோ அணி சார்பில் தொடக்க வீரர்களாக மிட்செல் மார்ஷ் மற்றும் ஐடன் மார்க்ராம் ஆகியோர் களமிறங்கினர். இருவரும் இணைந்து பவர் ப்ளேவில் தங்களது அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி 100க்கும் மேற்பட்ட ரன்களை குவித்தனர். இதையடுத்து 11வது ஓவரில் மார்ஷ் 65 ரன்களில் ஆட்டமிழந்தார். தொடர்ந்து கேப்டன் ரிஷப் பண்ட் களமிறங்கிய வேகத்தில் 7 ரன்களுடன் அவுட்டானார்.
அதன் பின்னர், நிக்கோலஸ் பூரன் களமிறங்கி தனது பங்கிறகு 45 ரன்கள் விளாசினார். இதனிடையே களமாடியவர்கள் சிங்கிள் டிஜிட்டில் ஆட்டமிழந்தனர். இதன் மூலம் 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்த லக்னோ அணி 205 ரன்கள் குவித்தது. இதையடுத்து 206 ரன்களை ஹைதராபாத் அணி சேஸிங் செய்ய உள்ளது.