For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

பாகிஸ்தானுக்கு உளவு - யூடியூபர் ஜோதி மல்ஹோத்ரா கைது!

பாகிஸ்தானுக்காக இந்தியாவில் உளவு பார்த்த குற்றச்சாட்டின் பேரில், டிராவல் வித் ஜோ சேனலை நடத்தி வரும் யூடியூபர் ஜோதி மல்ஹோத்ராவை போலீசார் கைது செய்துள்ளனர்.
10:21 AM May 18, 2025 IST | Web Editor
பாகிஸ்தானுக்காக இந்தியாவில் உளவு பார்த்த குற்றச்சாட்டின் பேரில், டிராவல் வித் ஜோ சேனலை நடத்தி வரும் யூடியூபர் ஜோதி மல்ஹோத்ராவை போலீசார் கைது செய்துள்ளனர்.
பாகிஸ்தானுக்கு உளவு   யூடியூபர் ஜோதி மல்ஹோத்ரா கைது
Advertisement

காஷ்மீரின் பஹல்காம் தாக்குதலைத் தொடர்ந்து பாகிஸ்தானுக்கு ஆதரவாக செயல்படுபவர்களை மத்திய அரசு கைது செய்து வருகிறது. இந்நிலையில் பாகிஸ்தானுக்கு உளவு பார்த்த குற்றச்சாட்டில் பஞ்சாப் மற்றும் ஹரியானாவைச் சேர்ந்த 6 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். இதில் யூடியூபர் ஜோதி மல்ஹோத்ராவும் அடங்குவார்.

Advertisement

'டிராவல் வித் ஜோ' என்ற யூடியூப் சேனலை நடத்தி வரும் இவர் பாகிஸ்தானுக்கு உளவு பார்த்ததையும் ஒப்புக் கொண்டுள்ளார். 33 வயதான இவர் கடந்த 2023ம் ஆண்டு கமிஷன் ஏஜெண்ட் மூலம் விசா பெற்று பாகிஸ்தானுக்கு சென்றுள்ளார். வாட்ஸ் அப், டெலிகிராம் உள்ளிட்ட தளங்களில் பாகிஸ்தானியருடன் தொடர்பில் இருந்து வந்துள்ளார்.

மேலும் இந்திய பகுதிகள் குறித்த ரகசியங்களை அவர்களுக்கு பகிர்ந்து வந்ததுடன், சமூக வலைதளங்களில் பாகிஸ்தானுக்கு ஆதரவாகவும் செயல்பட்டு வந்துள்ளார்.

Tags :
Advertisement