For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

தமிழ்நாடு உள்ளிட்ட 12 மாநிலங்களில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் - தேர்தல் ஆணையர்...!

பீகாரை தொடர்ந்து  இரண்டாம் கட்டமாக தமிழ்நாடு உள்ளிட்ட 12  மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் மேற்கொள்ள விருப்பதாக இந்திய தேர்தல் ஆணையர் தெரிவித்துள்ளார்.
05:47 PM Oct 27, 2025 IST | Web Editor
பீகாரை தொடர்ந்து  இரண்டாம் கட்டமாக தமிழ்நாடு உள்ளிட்ட 12  மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் மேற்கொள்ள விருப்பதாக இந்திய தேர்தல் ஆணையர் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு உள்ளிட்ட 12 மாநிலங்களில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம்   தேர்தல் ஆணையர்
Advertisement

பீகார் சட்டமன்றத் தேர்தலையொட்டி கடந்த ஆகஸ்ட் மாதம் அம்மாநிலத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் மேற்கொள்ளப்பட்டது. இதில்  மறைவு, இடம்பெயர்வு உள்ளிட்ட காரணங்களுக்காக சுமார்  65 லட்சம் வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டது. இதற்கு எதிர்கட்சிகள் தரப்பில் கடுமையாக  எதிர்ப்பு எழுந்தது.

Advertisement

இதனிடையே  நாடுமுழுவதும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் மேற்கொள்ளப்படும் என்றும் முதற்கட்டமாக சட்ட மன்றத்தேர்தலை சந்திக்க உள்ள தமிழ் நாடு உள்ளிட்ட மாநிலங்களில் சிறப்பு தீவிர திருத்தம் என்று தகவல்கள் வெளியாகின.

இந்த நிலையில் இன்று டெல்லியில் இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் செய்தியாளர்களை சந்தித்தார்.

அவர் பேசியது,  ”போலி வாக்காளர்களை கண்டறிந்து நீக்கவும், சரியான வாக்காளர்களை சேர்ப்பதற்கும் நாடு முழுவதும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் நடைபெற்று தொடங்கப்பட உள்ளது.

பீகாரை தொடர்ந்து  இரண்டாம் கட்டமாக 12  மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் நடைபெற உள்ளது. அதன்படி, தமிழ்நாடு, உத்தரப் பிரதேசம்,  மேற்கு வங்காளம், கோவா, சத்தீஸ்கர், குஜராத், கேரளம், மத்திய பிரதேசம், ராஜஸ்தான், ஆகிய மாநிலங்களிலும்  அந்தமான், லட்சத்தீவு, புதுச்சேரி ஆகிய யூனியன் பிரதேசங்களிலும் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளன.

நவம்பர் 4ஆம் தேதி முதல் கணக்கெடுப்புப் பணிகள் தொடங்கும். வரைவுப் பட்டியல் டிசம்பர் 9ஆம் தேதி வெளியிடத் திட்டமிடப்பட்டுள்ளது. பின்னர் இறுதி வாக்காளர் பட்டியல் பிப்ரவரி 7ஆம் தேதி வெளியிடப்படும்.

சிறப்பு தீவிர திருத்தப் பணிகளுக்கான அடையாளச் சான்றாக  ஆதார், பாஸ்போர்ட், சாதி சான்றிதழ் உள்ளிட்ட  12 ஆவணங்கள் பெறப்படும்.

எந்த ஒரு தகுதி வாய்ந்த வாக்காளர்களின் பெயர்களும் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்படவில்லை என்பதை தேர்தல் அதிகாரிகள் உறுதி செய்வார்கள். மேலும் வாக்கலர்களுக்கு உதவ அரசு அதிகாரிகள், என்சிசி உள்ளிட்ட மாணவர் பிரிவினர் மற்றும் தன்னார்வலர்கள் ஆகியோர் நியமிக்கப்படுவார்கள்.

தீவிர வாக்காளர் சரிபார்ப்பு பணி மேற்கொள்ளப்பட உள்ள 12 மாநிலங்களின் வாக்காளர் பட்டியல் இன்று இரவு 12 மணியிலிருந்து முழுமையாக நிறுத்தி வைக்கப்படுகிறது. அதன்படி வாக்காளர் தீவிர திருத்தப்பட்டியல் பணிகள் முடிந்து வெளியாகும் வாக்காளர் பட்டியல் அடிப்படையில் தான் இந்த 12 மாநிலங்களில் தேர்தல் நடைபெறும்” என்று தெரிவித்தார்.

Tags :
Advertisement