For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

உறவினரின் இறுதிச் சடங்கில் பங்கேற்க இடைக்கால ஜாமீன் கோரிய ஹேமந்த் சோரனின் மனு நிராகரிப்பு!

08:26 PM Apr 27, 2024 IST | Web Editor
உறவினரின் இறுதிச் சடங்கில் பங்கேற்க இடைக்கால ஜாமீன் கோரிய ஹேமந்த் சோரனின் மனு நிராகரிப்பு
Advertisement

உறவினரின் இறுதிச் சடங்கில் பங்கேற்க இடைக்கால ஜாமீன் கோரிய ஜார்கண்டின் முன்னாள் முதலமைச்சர் ஹேமந்த் சோரனின் மனுவை சிறப்பு நீதிமன்றம் நிராகரித்துள்ளது. 

Advertisement

ஜார்கண்ட் மாநிலத்தின் முதலமைச்சராக இருந்து வந்த ஹேமந்த் சோரன் அரசு நிலத்தை சட்ட விரோதமாக கையகப்படுத்தியதாக கூறி அமலாக்கத்துறை அவருக்கு எதிராக வழக்கு பதிவு செய்தது. இதில் நடந்த பண மோசடி தொடர்பாக அமலாக்கத்துறை விசாரணை நடத்தியது.

இதையும் படியுங்கள் :“அரசியல் எதிரிகளை பழிவாங்குவதற்காக அமலாக்க துறையை மத்திய அரசு பயன்படுத்துகிறது” – அரவிந்த் கெஜ்ரிவால் பதில் மனு!

அமலாக்கத்துறை விசாரணைக்குப் பிறகு, நில மோசடியுடன் தொடர்புடைய சட்டவிரோத பணப் பரிவர்த்தனை வழக்கு தொடர்பாக, ஜார்க்கண்ட் முன்னாள் முதலமைச்சர் ஹேமந்த் சோரனை அமலாக்கத் துறை கடந்த ஜனவரி 31-ஆம் தேதி கைது செய்தது. இதையடுத்து, அவர் தனது முதலமைச்சர் பதவியை ராஜிநாமா செய்தார். அவரது கட்சியின் மூத்த தலைவர் சம்பய் சோரன் ஜார்க்கண்ட் புதிய முதலமைச்சராக பதவியேற்றார்.

இந்த கைது நடவடிக்கைக்கு எதிராக உச்சநீதிமன்ற அறிவுறுத்தலின் பேரில், ஜார்க்கண்ட் உயர்நீதிமன்றத்தில் ஹேமந்த் சோரன் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு மீது கடந்த பிப்ரவரி 28-ஆம் தேதி இறுதி விசாரணை நடத்திய உயர்நீதிமன்றம், தீர்ப்பை ஒத்திவைத்தது. இந்த விவகாரத்தில் உயர்நீதிமன்றம் இதுவரை தீர்ப்பை வழங்காததைத் தொடர்ந்து, ஹேமந்த் சோரன் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் அண்மையில் முறையிடப்பட்டது.

இந்நிலையில்,  ஹேமந்த் சோரனின் உறவினர், ராஜா ராம் சோரன் உடல்நலக்குறைவு காரணமாக இன்று காலமானார். இதையடுத்து அவரது இறுதிச் சடங்கில் கலந்து கொள்ள 13 நாட்கள் இடைக்கால ஜாமீன் கோரி சிறப்பு நீதிமன்றத்தில் ஹேமந்த் சோரன் தரப்பில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு சிறப்பு நீதிபதி ராஜீவ் ரஞ்சனின் தலைமையில் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி ஹேமந்த் சோரனுக்கு இடைக்கால ஜாமீன் வழங்க மறுப்பு தெரிவித்தார்.மேலும், இந்த வழக்கை தள்ளுபடி செய்ய உத்தரவிட்டார்.

Tags :
Advertisement