Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

பல்வேறு நோய்களுக்கு சிகிச்சை அளிக்க சென்னையில் சிறப்பு முகாம் - அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி!

பல்வேறு நோய்களுக்கு சிகிச்சை அளிக்க சென்னையில் சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளது.
11:35 AM May 10, 2025 IST | Web Editor
பல்வேறு நோய்களுக்கு சிகிச்சை அளிக்க சென்னையில் சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளது.
Advertisement

சென்னை சைதாப்பேட்டையில் உள்ள பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் கலைஞரின் வருமுன் காப்போம் திட்டத்தின் மருத்துவ முகாமினை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்து பார்வையிட்டார். இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது பேசியதாவது,

Advertisement

"வருமுன் காப்போம் மருத்துவ முகாம்கள் கலைஞர் ஆட்சியில் இருந்து செயல்படுத்தி வருகிறோம். கலைஞர் வருமுன் காப்போம் என்ற பெயர் மாற்றம் இந்த ஆட்சியில் தான் நடைபெற்றது. ஒவ்வொரு மாநகராட்சிகளில் நான்கு இடங்களில் இந்த மருத்துவ முகாம்கள் நடைபெற்றது.

சென்னையில் 14 மண்டலங்களில் இந்த மருத்துவ முகாம் நடைபெற்றது. வருடத்திற்கு 1250 மருத்துவ முகாம்கள் செயல்படுத்த முதலமைச்சர் இந்த திட்டத்தை தொடங்கி வைத்தார். 5 ஆயிரத்து 554 முகாம்கள் கடந்த நான்கு வருடங்களில் நடைபெற்றுள்ளது. இந்த முகாம்கள் மூலம் 52 லட்சம் பேர் சிகிச்சை மேற்கொண்டுள்ளார்கள்.

முழு உடல் பரிசோதனை என்பது தனியார் மருத்துவமனையில் மேற்கொண்டால் 10 முதல் 12 ஆயிரம் வரை ரூபாய் செலவாகிறது. முழு உடல் பரிசோதனை குறித்து முதலமைச்சர் சென்னையில் புதிய திட்டத்தை தொடங்கி வைக்க உள்ளார்.

இந்த திட்டத்தின் மூலம், 16 வகையான மருத்துவர்கள், 30 வகையான சிகிச்சை மேற்கொள்ள உள்ளனர். இந்த முகாம்களுக்கு வருபவர்களுக்கு அடையாள அட்டை அந்த நேரத்தில் கொடுக்கப்படும். மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் புதிய காப்பீடு அட்டை பெற முடியும். சைதாப்பேட்டை, நுங்கம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் புதிய மருத்துவ காப்பீடு அட்டை பெற்றுக் கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்த சிறப்பு முகாம்கள் மூலம் காப்பீடு அட்டை இல்லாதவர்களுக்கு விரைவில் வழங்கப்படும். கலைஞர் காப்பீடு அட்டை உள்ளவர்கள் இந்த முகாம்களில் கொண்டு வந்து புதுப்பித்துக் கொள்ளலாம். சித்தா, ஓமியோபதி, யுனானி, ஆயுர்வேத போன்ற மருத்துவ சிகிச்சைகள் இந்த முகாம்களில் இடம் பெற்றுள்ளது.

பல்வேறு வகையான நோய்களுக்கு சிகிச்சை அளிக்க சிறப்பு முகாமினை விரைவில் சென்னையில் முதலமைச்சர் தொடங்கி வைக்க உள்ளார். சென்னையில் மட்டும் 15 இடங்களில் சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளது. வருமுன் காப்போம் என்ற திட்டத்தின் மூலம் முதலமைச்சர் சிறப்பு முகாம் திறந்து வைக்க உள்ளார்.

காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை இந்த சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளது. தமிழ்நாடு முழுவதும் 1,256 சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளது. அதனை முதலமைச்சர் விரைவில் தொடங்கில் வைக்க உள்ளார். ஒரு முகாமிற்கு 75 ஆயிரம் ரூபாய் வரை பொது சுகாதாரம் தரப்பில் ஒதுக்கப்பட்டுள்ளது.

மருந்தகம் மூலம் 33 ஆயிரம் ரூபாய் பொது சுகாதாரத்துறை சார்பில் கொடுக்கப்பட உள்ளது. மொத்தமாக 25 கோடி ரூபாய் இந்த முகாமிற்கு தமிழக அரசு செலவிடப்பட உள்ளது. 1231 தனியார் மருத்துவமனைகள் மூலம் அரசு காப்பீட்டு அட்டை பயன்படுத்தி வருகிறார்கள் என்றார்.

முதலமைச்சர் காப்பீடு அட்டையை வைத்து, பிரதம மந்திரி காப்பீடு அட்டையை தமிழகத்தில் மறைக்கப் பார்க்கிறார்கள் என முன்னாள் ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜன் கேள்விக்கு பதிலளித்த அமைச்சர்,

பிரதம மந்திரி காப்பீடு மூலம் வழங்கப்படும் தொகை என்பது ஒரு லட்ச ரூபாய் மட்டும் தான் ஆனால் முதலமைச்சர் காப்பீடு அட்டை மூலம் ஐந்து லட்சம் ரூபாய் வரை வழங்கப்படுகிறது. முதலமைச்சர் காப்பீடு திட்டத்தின் மூலம் 40 லட்ச ரூபாய் வரை பொதுமக்கள் பயன் பெற்று வருகிறார்கள். பிரதம மந்திரி காப்பீடு திட்டத்தின் மூலம் அந்த அளவிற்கு பெரிதும் ஏதுமில்லை.

இருதயம் மற்றும் கல்லீரல் உள்ளிட்ட அறுவை சிகிச்சைகளுக்கு காப்பீடு அட்டை அதிக செலவுடன் உதவுகிறது. இந்தியாவில் தமிழ்நாட்டில் தான் காப்பீடு மூலம் அதிகம் பணம் செலவழிக்கப்படுகிறது. முத்துலட்சுமி ரெட்டி திட்டத்திற்கு மத்திய அரசு 3 ஆயிரம் ரூபாய் மட்டும் தான் கொடுக்கிறது, அதற்கே பல்வேறு கட்டுப்பாடுகள் உள்ளது.

முதலமைச்சர் காப்பீடு அட்டைக்கு 18 ஆயிரம் ரூபாய் வரை தமிழகத்தில் ஒதுக்கப்படுகிறது. முதல்வர் காப்பீடு அட்டைக்கு வழங்கப்படும் 18,000 ரூபாயில் மத்திய அரசு 3 ஆயிரம் ரூபாய் மட்டும் தான் கொடுக்கிறது. மாநில அரசு தான் மற்ற செலவுகளை ஏற்கிறது, இந்த பணம் கொடுப்பதற்கு பல்வேறு குளறுபடிகள் ஏற்பட்டு வருகிறது" என்று தெரிவித்துள்ளார்.

Tags :
ChennaidiseasesinterviewMinisterMSubramanianSpecial Camp
Advertisement
Next Article