சபரிமலை செல்வோருக்கு சிறப்பு பேருந்து | அரசு விரைவு போக்குவரத்து துறையின் முக்கிய அறிவிப்பு!
கிளாம்பாக்கம் மற்றும் கோயம்பேட்டிலிருந்து சபரிமலைக்கு சிறப்புப் பேருந்துகள் இயக்கத்தை இன்று அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் ரா. மோகன் தொடங்கி வைத்தார்.
கேரள மாநிலத்தின் சபரிமலையில் உள்ள ஐய்யப்பன் கோயிலில் , ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் மண்டல பூஜை மற்றும் மகர விளக்கு ஆகிய திருவிழாக்களின் போது, தமிழ்நாட்டில் இருந்து பக்தர்கள் சென்று வர ஏதுவாக, தமிழ்நாட்டின் முக்கிய நகரங்களிலிருந்து அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகத்தின் சார்பில் ஆண்டுதோறும் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையம் கிளாம்பாக்கம் மற்றும் கோயம்பேட்டிலிருந்து பம்பைக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கத்தை, இன்று (15.11.2024), அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் ரா.மோகன் தொடங்கி வைத்தார். இது தொடர்பாக விரைவுப் போக்குவரத்து கழகம் சார்பாக அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது :
" பேருந்துகள் இன்று (15.11.2024) முதல் 16.01.2025 வரை நாள்தோறும் இயக்கப்படும். இந்த ஆண்டு 15.11.2024 முதல் 16.01.2025 வரை நாள்தோறும், இரவு 8.00 மணிக்கு மதுரையிலிருந்து உசிலம்பட்டி, ஆண்டிப்பட்டி, தேனி வழியாக பம்பைக்கும், மாலை 05.30 மணிக்கு புதுச்சேரியிலிருந்து கடலூர், நெய்வேலி டவுன்சிப், விருதாச்சாலம், பெண்ணாடம், திட்டக்குடி வழியாக பம்பைக்கும், இரவு 09.00 மணிக்கு திருச்சியிலிருந்து திண்டுக்கல், தேனி வழியாக பம்பைக்கும் அதிநவீன சொகுசு மிதவைப் பேருந்துகள் (Ultra Deluxe) இயக்கப்படவுள்ளன.
இதையும் படியுங்கள் : DMK | “கட்சிக்கு துரோகம் செய்யும் துரோகிகளை மன்னிக்க மாட்டேன்..” - அமைச்சர் துரைமுருகன் காட்டம்!
சபரிமலை தேவஸ்தானம் அறிவிப்பின்படி 27.12.2024 முதல் 30.12.2024 மாலை 5.00 மணி வரை கோவில் நடை சாத்தப்படுவதால் 26.12.2024 முதல் 29.12.2024 வரை இச்சிறப்புப் பேருந்து இயக்கப்படமாட்டாது. மேலும், 60 நாட்களுக்கு முன்னதாக இச்சிறப்புப் பேருந்துகளுக்கு Online மூலமாக, www.tnstc.in மற்றும் TNSTC Official app ஆகிய இணையத்தளங்களில் முன்பதிவு செய்துகொள்ளும் வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. மேலும், பேருந்துகளின் விவரம் உள்ளிட்ட பல்வேறு தகவல்களுக்கு, 9445014426 மற்றும் 9445014421 ஆகிய கைப்பேசி எண்களைத் தொடர்பு கொண்டு அறிந்து கொள்ளலாம்"
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.