விண்வெளி சுற்றுலா - பிரபல பாப் பாடகர் கேட்டி பெர்ரி உட்பட 6 பேர் பயணம்!
அமேசான் நிறுவனர் ஜெஃப் பெஸோஸ் விண்வெளி ஆராய்ச்சிக்காக ‘ப்ளூ ஆரிஜின்’ என்ற நிறுவனத்ததை தொடங்கியுள்ளார். இந்த நிறுவனத்திற்கு
சொந்தமான ‘நியூ ஷெப்பர்ட்’ ராக்கெட்டில் 6 பெண்கள் இணைந்த குழுவினர் இன்றிரவு(ஏப்ரல்.14) 8.30 மணிக்கு( IST ) விண்வெளிக்கு அனுப்பி வைக்கப்பட்டு, 11 நிமிடங்கள் வரை விண்வெளியில் உலா வரவுள்ளனர்.
மனிதர்களை விண்வெளி சுற்றுலா அழைத்து செல்வதற்காக ‘ப்ளூ ஆரிஜின்’ நிறுவனம் ’நியூ ஷெப்பர்ட்’ என்ற திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. அதன் கீழ் இன்று 11வது குழு விண்வெளிக்கு செல்ல உள்ளனர். விண்வெளி சுற்றுலா செல்பவர்களின் விவரம்,
1 . கெய்ல் கிங்
சிபிஎஸ் நிகழ்ச்சி தொகுப்பாளரான இவர், ஓப்ரா டெய்லியில் பணியாற்றியதற்காகவும், சிரியஸ்எக்ஸ்எம் வானொலியில் கெய்ல் கிங் இன் தி ஹவுஸின் தொகுப்பாளராகவும் அறியப்படுகிறார்.
2. ஐஷா பௌ
நாசாவிலன் முன்னாள் ராக்கெட் விஞ்ஞானியாக பணியாற்றியுள்ளார்.
3. நுயென்
விண்வெளி வீரரான இவர் சமூக உரிமைகள் செயல்பாட்டாளராக சேவையாற்றியுள்ளார்.
4. கேட்டி பெர்ரி
அமெரிக்க பாப் பாடகரான இவர் கிராமி விருதுகளை வென்றுள்ளார். விண்வெளி பயணம் குறித்து பெர்ரி தனது இன்ஸ்டாகிராமில், “நான் 15 வருடங்களாக விண்வெளிக்குச் செல்ல வேண்டும் என்று கனவு கண்டேன்,அந்தக் கனவு நனவாகபோகிறது” என்று நெகிழ்ச்சியாக கூறியுள்ளார்.
5. லாரன் சான்செஸ்
லாரன் சான்செஸ் அமெரிக்க தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் வணிக பத்திரிகையாளராக புகழ் பெற்றார்.
6.கேரியேன் ஃப்ளின்
ஹாலிவுட் திரைப்படத் தயாரிப்பாளர்