For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

"தமிழ்நாட்டில் தென்மேற்கு பருவமழை இயல்பைவிட 124% அதிகம்" - வானிலை ஆய்வு மையம்!

09:53 AM Jun 29, 2024 IST | Web Editor
 தமிழ்நாட்டில் தென்மேற்கு பருவமழை இயல்பைவிட 124  அதிகம்    வானிலை ஆய்வு மையம்
Advertisement

தமிழ்நாட்டில் நிகழாண்டில் தென்மேற்கு பருவ மழை இயல்பை விட 124 சதவீதம் அதிகமாக பெய்துள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Advertisement

தமிழ்நாட்டில் கடந்த மார்ச் மாதம் முதல் வெயில் வாட்டி வதைத்து வந்தது.  அதிலும் வெப்ப அலை காரணமாக பல்வேறு மாவட்டங்களில் சுமார் 110 டிகிரிக்கு மேல் வெப்பம் பதிவானது.  ஈரோடு போன்ற மாவட்டங்களில் 112 டிகிரி அளவுக்கு வெயில் வாட்டி வதைத்து வந்தது.  சென்னையில் மட்டும் 105 டிகிரிக்கு உள்ளாகவே வெப்பநிலை பதிவாகி வந்தது.  வெப்ப அலை கடுமையாக இருந்த காரணத்தினால் மக்கள் அனைவரும் கடுமையாக அவதி அடைந்தனர்.

இதற்கிடையே, பல இடங்களில் கோடை மழை கொஞ்சம் வெக்கையை தணித்தது. தொடர்ந்து தென்மேற்கு பருவமழை தொடங்கிய நிலையில் தமிழ்நாட்டில் ஜூன் மாதம் பல இடங்களில் நல்ல மழைப் பொழிவு கிடைத்துள்ளது.  இந்த நிலையில், தமிழ்நாட்டில் நிகழாண்டில் தென்மேற்கு பருவ மழை இயல்பைவிட 124 சதவீதம் அதிகமாக பெய்துள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளதாவது,

"தமிழ்நாடு முழுவதும் ஜூன் 1 முதல் 28ம் தேதி வரையிலான காலகட்டத்தில் தென்மேற்கு பருவமழை இயல்பாக 47.8 மி.மீ. பதிவாக வேண்டிய நிலையில்,  நிகழாண்டு 107.2 மி.மீ. மழை பதிவாகியுள்ளது. இது இயல்பைவிட 124 சதவீதம் அதிகமாகும்.  கடந்த மே மாதத்தில் இயல்பைவிட 19 சதவீதம் அதிக மழை பதிவானது. இதில், அதிகபட்சமாக நீலகிரியில் 292.3 மி.மீ., கோவையில் 231.5 மி.மீ., ராணிப்பேட்டையில்  206.7 மி.மீ., கன்னியாகுமரியில்  200.4 மி.மீ,. மழை பதிவானது.

மேலும், குறைந்தபட்சமாக தூத்துக்குடியில் 6.2 மி.மீ. மழை பெய்துள்ளது. சென்னையில் ஜூன் மாத தொடக்கத்திலிருந்து பகல் நேரங்களில் வெயில் சுட்டெரித்தும், இரவு நேரங்களில் மழை பெய்தும் வருகிறது. இயல்பாக சென்னையில் 58.8 மி.மீ. மழை பதிவாகும் நிலையில், இந்த முறை 200.4 மி.மீ. மழை பதிவானது. அதாவது இயல்பைவிட 241 சதவீதம் மழை பதிவாகியுள்ளது" என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :
Advertisement