தெற்காசிய ஜூனியர் தடகள சாம்பியன்ஷிப் : மகளிர் #Highjump -ல் தங்கம் வென்றார் இந்தியா வீராங்கனை பூஜா!
சென்னையில் நடைபெற்று வரும் தெற்காசிய ஜூனியர் தடகள சாம்பியன்ஷிப் தொடரில் மகளிர் உயரம் தாண்டுதலில் இந்திய வீராஙகனை பூஜா முதலிடத்தை படித்து தங்கப்பதக்கம் வென்றார்.
சென்னையில் 29 ஆண்டுகளுக்குப் பிறகு சர்வதேச தடகள சாம்பியன்ஷிப் தொடர் நடைபெறுகின்றது. நான்காவது தெற்காசிய ஜூனியர் தடகள சாம்பியன்ஷிப் தொடர் இன்று (செப்-11ம் தேதி)தொடங்கி வரும் 13ஆம் தேதி வரை நேரு விளையாட்டரங்கள் நடைபெற்ற வருகின்றது. இந்தியா உட்பட ஏழு நாடுகள் பங்கேற்றுள்ள இந்த தொடரில் 173 வீரர்கள் பங்கேற்றிருக்கின்றனர்.
இதில் முதல் நாளான இன்று நடைபெற்ற மகளிருக்கான உயரம் தாண்டுதல் பிரிவில் இந்தியாவைச் சேர்ந்த பூஜா 1.8 மீட்டர் உயரம் தாண்டி முதலிடத்தை பிடித்து தங்கப்பதக்கம் வென்றார். அடுத்து நடைபெற்ற மகளிருக்கான 800 மீட்டர் ஓட்டப்பந்தய இறுதிப் போட்டியில் இலங்கை வீராங்கனை அபிஷேகா முதலிடத்தையும் இந்திய வீராங்கனை இரண்டாவது இடத்தையும் லட்சுமி பிரியா மற்றொரு இலங்கை வீராங்கனை சன்சலா மூன்றாவது இடத்தையும் பிடித்தனர்.
இதையும் படியுங்கள் : சர்ச்சைக்குரிய ஆன்மிக பேச்சாளர் #MahaVishnuக்கு 3 நாட்கள் போலீஸ் காவல் – நீதிமன்றம் அனுமதி!
தொடர்ந்து நடைபெற்ற ஆடவருக்கான 800 மீட்டர் ஓட்டப்பந்தய இறுதி போட்டியில் முதலிடத்தை இலங்கையை சேர்ந்த வீரர் சவின்டு அவிஷ்கா பிடித்து தங்கம் வென்றார். இரண்டாவது இடத்தை இந்தியாவைச் சேர்ந்த வினோத்குமாரும், மூன்றாவது இடத்தை மற்றொரு இந்திய வீரரான போபன்னாவும் வெள்ளி மற்றும் வெண்கல பதக்கம் வென்றனர்.