For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

தெற்கு அந்தமான் அருகே காற்றழுத்த தாழ்வு பகுதி: டிச.3-ம் தேதி புயலாக மாறும் - வானிலை ஆய்வு மையம் தகவல்!

09:12 AM Dec 01, 2023 IST | Web Editor
தெற்கு அந்தமான் அருகே காற்றழுத்த தாழ்வு பகுதி  டிச 3 ம் தேதி புயலாக மாறும்   வானிலை ஆய்வு மையம் தகவல்
Advertisement

தெற்கு அந்தமான் அருகே நிலவும் காற்றழுத்தத் தாழ்வு பகுதி, டிசம்பர் 3-ம் தேதி புயலாக மாறும் எனவும், டிச. 4-ம் தேதி சூறாவளி புயலாக மாறும் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Advertisement

இதுகுறித்து இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளதாவது:

“தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தெற்கு அந்தமான் கடல் பகுதிகளில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று (டிச. 1) 5:30 மணி அளவில் தென்கிழக்கு வங்காள விரிகுடாவில் நீடிக்கிறது. அதனைத்தொடர்ந்து, மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து அடுத்த 12 மணி நேரத்தில் தென்கிழக்கு வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடையும். 

மேலும், மேற்கு வடமேற்கு நோக்கி நகர்ந்தால், அது படிப்படியாக தீவிரமடைந்து, டிச. 3-ம் தேதி தென்மேற்கு வங்கக்கடலில் ஒரு சூறாவளி புயலாக மாறும். அதன்பிறகு, இது வடமேற்கு திசையில் நகர்ந்து வட தமிழகம் மற்றும் தெற்கு ஆந்திரா கடற்கரை அருகே டிசம்பர் 04-ம் தேதி அதிகாலை சூறாவளி புயலாக அடையும்.” இவ்வாறு இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Tags :
Advertisement