WTC | ஆஸி.யை 212 ரன்களில் ஆல் அவுட்டாக்கி 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறும் தென் ஆப்ரிக்கா!
லண்டனில் உள்ள லார்ட்ஸ் மைதானத்தில் மைதானத்தில் நேற்று(ஜூன்.12) உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி தொடங்கியது. ஆஸ்திரேலியாவுக்கும் தென் ஆப்ரிக்காவும் இடையே நடந்த இந்த போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்ரிக்க அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.
முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா அணியில் தொடக்க வீரர்களாக உஸ்மான் கவாஜா மற்றும் மார்னஸ் லாபுசாக்னே களமிறங்கினர். இதில் உஸ்மான் கவாஜா 20 பந்துகள் ஆடி ரபாடாவிடம் டக் அவுட்டானர். தொடர்ந்து கேமரன் கிரீன் 4 ரன்களுக்கு ரபாடாவிடம் விக்கெட்டை பறிகொடுத்தார். தொடக்கத்திலேயே 2 விக்கெட்டுகளை இழுந்து தடுமாறிய ஆஸ்திரேலியா அணியில் ஸ்டீவ் ஸ்மித் நிதானமாக ஆடி தனது பங்கிற்கு 66 ரன்கள் எடுத்தார்.
அதைத் தொடர்ந்து டிராவிஸ் ஹெட் 11 ரன்களில் மார்கோ ஜான்சனிடம் விக்கெட்டை இழந்தார். இதையடுத்து வந்த பியூ வெப்ஸ்டர் 92 பந்துகள் ஆடி 72 ரன்களை சேர்த்து ரபாடாவிடம் ஆட்டமிழந்தார். இவருகடுத்து வந்ததில் அலெக்ஸ் கேரி 23 ரன்கள் அடித்தார். மற்றவர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க, 56.4 ஓவர்களில் ஆஸ்திரேலிய அணி 212 ரன்கள் அடித்து ஆல் அவுட்டானது.
தென் ஆப்ரிக்க அணியின் பந்து வீச்சை பொறுத்தவரை அதிகபட்சமாக ரபாடா 5 விக்கெட்டுகளை எடுத்து அசத்தினார். அதே போல் மார்கோ ஜான்சன் தனது பங்குக்கு 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதையடுத்து 213 ரன்களை சேஸிங் செய்து வரும் தென் ஆப்ரிக்க அணி தற்போது 22 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 43 ரன்கள் எடுத்து தடுமாறி வருகிறது.