“தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு 3 மடங்கு அதிகமாக செய்தும் சிலர் அழுதுகொண்டே இருக்கிறார்கள்” - பிரதமர் மோடி பேச்சு!
பிரதமர் மோடி ராமேஸ்வரத்தில் புதிய பாம்பன் ரயில் பாலத்தை திறந்து வைத்து சிறப்புரையாற்றினார்.
அப்போது அவர் பேசியதாவது, “தமிழ்நாட்டின் சங்ககால இலக்கியத்திலும் கூட ஸ்ரீ ராமகிரானை பற்றி கூறப்பட்டிருக்கின்றது நான் ராமேஸ்வரத்தின் இந்த பவித்திரமான பூமியிலே நாட்டு மக்கள் அனைவருக்கும் ஸ்ரீ ராம நவமியையொட்டி என் இதயபூர்வமான வாழ்த்துக்கள் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த விசேஷமான நாளன்று 8300 கோடி ரூபாய் மதிப்பிலான நலத்திட்டங்களை அர்ப்பணிக்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. இந்த ரயில் மற்றும் சாலை திட்டங்கள் தமிழ்நாட்டில் இணைப்புத்திறனை வலுப்படுத்தும்.
ராமேஸ்வரத்திற்கான இந்த புதிய பாம்பன் பாலமும் கூட தொழில்நுட்பத்தையும் பாரம்பரியத்தையும் ஒன்று சேர்க்கிறது. ஆயிரக்கணக்கான பழமையான நகரம் இன்று 21ஆம் நூற்றாண்டில் பொறியியல் அற்புதத்தால் இணைக்கப்பட்டிருக்கிறது. அதற்காக நமது பொறியாளர்களுக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். இந்த பாலம் தான் இந்தியாவின் முதல் செங்குத்து தூக்கு ரயில் வழி கடல் பாலம். இதற்கு அடியிலே பெரிய கப்பல்கள் செல்ல முடியும் நான் சற்று நேரம் முன்னதாக தான் ஒரு புதிய ரயில் சேவையையும் ஒரு கப்பல் பயண துவக்கி வைத்தேன். இத்திட்டத்தின் பொருட்டு தமிழ்நாடு மக்களுக்கு மீண்டும் வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன். இந்த பாலத்திற்கான தேவை பல ஆண்டுகளாக இருந்து வந்திருக்கிறது. உங்கள் நல்லாசியோடு இந்த பணியை நிறைவு செய்யும் பெயர் எங்களுக்கு கிடைத்திறது. இந்த பாலம் சுலபமாக வியாபாரம் மற்றும் பயணம் செய்வதற்கு பயன்படுகிறது. பல லட்சம் மனிதர்களின் வாழ்வில் இது ஆக்கப்பூர்வமான தாக்கத்தை ஏற்படுத்தும்.
ராமேஸ்வரம் தொடங்கி சென்னை வரையும், நாட்டின் பிற பகுதிகளுக்கிடையேயான இணைப்பை இந்த புதிய ரயில் சேவை மேம்படுத்தும். தமிழ்நாட்டின் சுற்றுலா மற்றும் வணிகத்திற்கு இது ஆதாயத்தை அள்ளித் தரும். இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகளை ஏற்படுத்தி தரும். கடந்த 10 ஆண்டுகளில் இந்தியா தனது பொருளாதாரத்தை இரட்டிப்பாக்கியுள்ளது. கடந்த பத்தாண்டுகளிலே பாரதம் தர பொருளாதாரத்தின் அளவினை இரட்டிப்பாக இருக்கின்றது. நீர் எரிவாயு குழாய்கள் போன்ற கட்டமைப்புகளுக்கான நிதி ஒதுக்கீட்டை ஆறு மடங்கு உயரத்தில் இருக்கிறோம். வடக்கில் ஜம்மு காஷ்மீரில் மிக உயரமான ரயில் பாலங்களில் ஒன்றான சினாப் பாலம் அமைக்கப்பட்டுள்ளது. மேற்கில் மும்மையில் அட்டல் பாலம் அமைக்கப்பட்டுள்ளது. கிழக்கில் அசாமில் போகிபீல் அமைந்துள்ளது. இப்போது தெற்கில் பாம்பன் ரயில் பணிகள் நிறைவடைந்துள்ளது.
வளர்ச்சியடைந்த இந்தியா நோக்கிய பயணத்தில் தமிழ்நாட்டிற்கு என மிகப் பெரிய தமிழ்நாட்டின் வல்லமை எத்தனை அதிகம் பாரதத்தின் வளர்ச்சியும் அந்த அளவுக்கு விரை வாகும் என்று நான் கடந்த பத்தாண்டிலே தமிழ்நாட்டின் வளர்ச்சிக்காக 2014 ஆம் ஆண்டுக்கு முன்பு செய்ததை விட தற்போது மூன்று மடங்கு அதிகமாக கொடுக்கப்பட்டுள்ளது. இவற்றை எல்லாம் செய்தும் கூட சிலர் அழுதுகொண்டே இருக்கிறார்கள். அவர்களால் அழ மட்டுமே முடியும். அவர்கள் அழுதுகொண்டே இருக்கட்டும். 2014 ஆம் ஆண்டுக்கு முன்பு வரை ரயில் துறை திட்டங்களுக்காக ஒவ்வொரு ஆண்டும் வெறும் 900 கோடி ரூபாய் மட்டுமே கிடைத்து வந்தது. அப்போதெல்லாம் கூட்டணியில் நான் கூற தேவையே இல்லை. இந்த ஆண்டு தமிழ்நாட்டின் ரயில் பட்ஜெட் 6,000 மதிப்பும் அதிகம். மத்திய தமிழ்நாட்டில் இருக்கும் 77 ரயில் நிலையங்களையும் நவீனப்படுத்தும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றது இதிலே ராமேஸ்வரம் ரயில் நிலையம் ஒன்று.
கடந்த 10 ஆண்டுகளில் கிராமப்புற சாலைகள் மற்றும் நெடுஞ்சாலைகள் துறையிலே கூட ஏராளமான பணிகளில் மேற்கொள்ள்ப்பட்டுள்ளது. 2014 ஆம் ஆண்டிற்கு பிறகு தமிழ்நாட்டிலே மத்திய அரசின் உதவியோடு 4000 கிலோமீட்டர் அளவு சாலைகள் போட ப்பட்ட சென்னை துறைமுகத்தை இணை க்கவல் அருமையான கட்டமைப்புக்கான மேலும் ஒரு எடுத்துக்காட்டு. இன்று அர்ப்பணித்த திட்டங்கள். தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களோடு மட்டுமல்லாமல் ஆந்திர பிரதேசம் இணைப்பையும் மேம்படுத்தும். சென்னை மெட்ரோ போன்ற நவீன பொதுமக்கள் போக்குவரத்து வசதியும் கூட தமிழ்நாட்டிலே சுலபமான பயணம் மேற்கொள்ளுதலை மேம்படுத்துகிறது. இது இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படும் என்பதை மறந்துவிடக்கூடாது.
கடந்த பத்தாண்டில் சமூக கட்டமைப்பில் சாதனை காணும் அளவிற்கு முதலீடு செய்யப்பட்டுள்ளது. 4 கோடிக்கும் அதிகமான குடும்பங்களுக்கு கான்கிரீட் வீடுகள் கட்டப்பட்டுள்ளது. இவற்றில் பிரதமர் குடியிருப்பு திட்டத்தில் 12 லட்சத்திற்கும் மேற்பட்ட கான்கிரீட் வீடுகள் தமிழ்நாட்டு மக்களுக்கு கிடைத்துள்ளது.12 கோடி குடும்பங்களுக்கு முதன்முறையாக குழாய் வழி குடிநீர் கொண்டு சேர்க்கப்பட்டிருக்கிறது. நாட்டு மக்களுக்கு தரமாக சிகிச்சை அளிப்பத்தில் நமது அரசாங்கம் அர்ப்பணிப்போடு செயல்பட்டு வருகிறது. ஆயுஸ்மான் பாரதம் திட்டத்தின்படி, தமிழ்நாட்டில் ஒரு கோடிக்கும் மேற்பட்ட சிகிச்சைகள் நடைபெற்றாகிவிட்டன. தமிழ்நாட்டின் இந்த குடும்பங்கள் சிறிய தொகை அல்ல எட்டாயிரம் கோடி ரூபாய் செலவில் தமிழ் சொந்தங்கள் பயன்பெற்று உள்ளார்கள்.
தமிழ்நாட்டில் 1400 -கும் அதிகமான மக்கள் மருந்தகங்கள் உள்ளது. இங்கு 80 சதவீதம் வரையிலான தள்ளுபடி விலையில் கிடைக்கிறது. இதனால் 700 கோடி ரூபாய் மக்களுக்கு சேமிப்பு ஏற்பட்டுள்ளது. மருத்துவp படிப்பு படிக்க அயல்நாடுகளுக்கு செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்படக் கூடாது. கடந்த ஆண்டுகளில் தமிழ்நாட்டிற்கு 1 1 புதிய மருத்துவ கல்லூரிகள் கிடைத்திருக்கின்றன. ஏழைகள் மருத்துவ படிப்பினை தமிழில் படிக்க வேண்டும் என்பதை விரும்புகிறோம். இதனால் நான் வேண்டி விரும்பி மாநில அரசிடம், ஏழை குழந்தைகள் மருத்துவ படிப்பு படிக்க வேண்டும் என்பதற்காக பாடத்திட்டத்தினை தமிழ் மொழியில் செய்து தாருங்கள் என்று கேட்டுக்கொள்கிறேன்.
இந்தியாவின் வளர்ச்சியில் நமது நீல பொருளாதரத்திற்கு மிகப்பெரிய பங்கு அமைய இருக்கின்றது. தமிழ்நாட்டில் நம்முடைய மீனவர் சமூகம் மிகவும் கடினமாக உழைக்கும் சமுகமாகும். தமிழ்நாட்டில் மீன்வளத்துறை கட்டமைப்பினை வலு ப்படுத்த மாநிலத்திற்கு தேவையான அனைத்தையும் மத்திய அரசு செய்து வருகிறது. ஐந்தாண்டுகளில் பிரதம மந்திரி மீன் வளர்ப்பு திட்டங்களின்படி தமிழ்நாட்டிற்கு கோடிக்கணக்கான ரூபாய் நிதியாக வழங்க ப்பட்டிருக்கும் என்பதே நம்முடைய முயற்சியாக இருக்கிறது. இந்திய அரசு மீனவர்களின் சங்கட காலங்களில் தோளோடு தோல் கொடுத்து வந்திருகிறது.
அதன் முயற்சிகள் காரணமாக கடந்த 10 ஆண்டுகளில் மட்டும் 3700க்கும் மேற்பட்ட மீனவர்கள் இலங்கையில் இருந்து மீட்டுக் கொண்டுவரப்பட்டுள்ளனர். இவர்களில் 600க்கும் அதிகமான மீனவர்கள் மட்டும் கடந்த ஓராண்டிலே மீட்டுக் கொண்டு வரப்பட்டு உள்ளனர். சில காலம் முன்பு தூக்கு மேடையை முத்தமிட நம்முடைய 5 மீனவர்கள் இருந்தபோது மீட்டுக் கொண்டு வந்தது மத்திய அரசுதான். தமிழ் மொழி மற்றும் மரபு உலகின் அனைத்து இடங்களுக்கும் கொண்டு சேர்க்க அரசாங்கம் தொடர்ந்து முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.
வழக்கமாக எனக்கு தமிழ்நாட்டில் இருந்து சில தலைவர்கள் கடிதங்கள் எழுதுவது உண்டு. ஆனால் கையெழுத்து ஆங்கிலத்தில் போட்டு அனுப்புகிறார்கள். குறைந்தபட்சம் கையெழுத்தையாவது தமிழ்மொழியில் போடக்கூடாதா? என்று நான் வியப்பதுண்டு. இன்று மிகவும் பவித்திரமான புனிதமான நாள் இங்கே இந்த பவித்திரமான இடத்திலே நூறாண்டுகளுக்கு முன்பாக இந்த பாம்பன் இடத்திலே பாலம் கட்டியவர் யார் தெரியுமா அவர் ஒரு குஜராத்தி அதே குஜராத்தி பகுதியில் சேர்ந்த நான் இன்று திறந்து வைக்கிறேன் மகிழ்ச்சி அளிக்கிறது. இந்த புனிதமான ராமேஸ்வரம் பூமியிலே ராமநவமி நன்னாளிலே எனக்கு ஒரு உணர்ச்சி பயப்பட்ட ஒரு சூழ்நிலை என் மனதில் நிலவுகிறது இன்று பாரதிய ஜனதா கட்சி நிறுவன நாள். அனைத்து பாரதிய ஜனதா கட்சியின் தொண்டர்கள் இணை ந்து ஏழைகளுக்கு தேவையான உதவிகள் அனைத்தும் செய்யப்படும் பல கோடி தொண்டர்களின் நானும் ஒருவன். நன்றி வணக்கம் மீண்டும் சந்திப்போம் உரையை நிறைவு செய்தார்”
இவ்வாறு பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.